பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

361

இசைவின்மை [வேற்றுமை]161, செயலின்மை [புரிவின்மை]162, செயல் [இயல்பு]163, என்பன.

பொருள்களின் காரண காரியங்களின் இசைவை உணர்வது சைவு. அவற்றைத் தனித்தனியாக உணர்வது இசைவின்மை. நிலையான பொருள்களிலும் நிலையற்ற பொருள்களிலும் பயன் விளைவிக்கும் முதற் காரணத்தை மனம் உணரமுடியாதென்று கூறுவது செயலின்மை ஆகும். அரிசியின் முளை அரிசியிலிருந்து தோற்றுகிறது என்றல் செயல்கள் காண்டலாகும்.

நற்பேறுகள் நான்கு

"நற்பேறுகள் [கொள்பயன்கள்]164 ஆவன!"

165

i. உலகம் பல பொருள்களின் தொகுதி யல்லது வேறன்று என்று அறிவது.

ii. அவற்றில் பற்றுக்கொள்வது நன்றன்றென உணர்வது. iii. உலகுக்குப் படைப்பவனுடன் எத்தகைய தொடர்பும் கிடையாதென்றறிவது.

iv. ஒரு காரியம் அதன் உடனடிக் காரணத்திலிருந்து [எய்து காரணத்திலிருந்து] தோற்றுகிறதென்றுணர்வது.

வினா விடை நான்கு

66

வினாக்களுக்கு நான்கு வகையாக விடையிறுக்கப்

படலாகும்:"

i. துணிந்து விடைபகரல்;

ii. கூறுபடுத்தி விடைபகரல்;

iii. எதிர்வினா விடுத்தல்;

iv. வாளாதிருத்தல்.

'தோற்றுகின்ற ஒரு பொருள் மறையுமா மறையாதா?' என்ற கேள்விக்கு, துணிந்த விடை ‘மறையும்' என்பது. 'மாண்ட மனிதன் மீண்டும் பிறப்பானா?' என்ற கேள்விக்கு, அவன் பற்று முழுவதும் விடுத்துவிட்டானா, இல்லையா? என்பது விடையாகும் (அவன் பற்றற்றவனானால் திரும்பிப் பிறக்கமாட்டானென்பதும்,