அப்பாத்துரையம் - 26
(362) ||. பற்றுடையவனானால் பிறப்பானென்பதும் குறிப்பு).'எது முந்தியது, முட்டையா பனையா?' என்று கேட்கப்பட்டால், ‘எப்பனைக்கு எம்முட்டை?' என்று விடையிறுக்கப்பட வேண்டும். ‘வானத்து மலர் (கற்பனை போலி) பழையதா, புதியதா!' என்று கேட்கப்படின் விடைதரப்பட வேண்டியதில்லை!6
"பற்று, வீடு ஆகியவற்றின் முதற்காரணத்தை விளக்கும் தகுதியாருக்கும் கிடையாது. (நாம் அறிந்த வரை) மேற்குறிப்பிட்ட எல்லாவற்றின் உடனடிக் காரணம் இன்பம் அவா, சீற்றம், மனமருட்சி ஆகியவையே,’
""
“நம் உடல் நிலையற்றது, துன்பமுடையது, ஆன்மா அற்றது, மாசுடைது என்றுணர்வதாலேயே இன்ப அவாவை அகற்ற முடியும். சீற்றம் இதுபோல் முற்றிலும் அடக்கப்பட வேண்டு மானால் அன்பு, அருள், இரக்கம் ஆகியவை பேணப்படல் வேண்டும்."
“(அறவுரைகளைக்) கவனமாகக் கேள்.ஆர்வத்துடன் அவற்றை ஆழ்ந்து நினை. உணர்ச்சியுடன் அவற்றை நடைமுறைப்படுத்து. எல்லா மருட்சியும் அகலும்படியாக அவற்றின் உண்மையை உணர். (மேற் குறிப்பிட்ட) நான்கு வழிகளிலும் உன் உள்ளத்தில் ஒளியூட்டு.”
இந்தியாவின் மெய்விளக்கமுறைகளின் முழு விளக்கங் களுள்ளும் தற்போது மிகவும் மக்களிடையே வழங்குவது சர்வ தர்சன சங்கிரகமே. இதன் ஆசிரியர் சமயச் சீர்திருத்தப்பெரியாரான மாத்துவாச்சாரியார். அது 14-ஆம் நூற்றாண்டில், புத்த உலோகாயத முறைகள் இந்தியாவில் கிட்டத்தட்டத் தடமற்றுப் போனபின் இயற்றப்பட்டது. அதுவே அது ஆறு மெய்விளக்க முறைகளைக் கீழ்வருமாறு குறிக்கிறது:-
i. பூர்வமீமாம்சை.
ii. உத்தரமீமாம்சை அல்லது வேதாந்தம். iii.சாங்கியம்.
iv. யோகம்.
V.நியாயம்.
vi. வைசேடிகம்.