ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
1375 அமைதித்துறைக் கலைகளை வளர்த்த இனங்கள் சற்றுப் பண்பமைதி மிக்க தெய்வங்களை வணங்கினார்கள். தெய்வங்கள் பழம், பூ, நறும்புகை ஆகியவற்றைப் பெற்று மனநிறைவடைந்தன.
முனைத்த முன்னேற்றமுடைய வகுப்பினரின் பண்பு தேர்ந்த உள்ளமுடையவர்கள் அறத்தின் ஆட்சி, இயற்கையின் ஒருமைப் பாடு ஆகிய கருத்தியல் படிவங்களை உணரும் ஆற்றல் உடையவர் களாய், தம் வாழ்க்கை முறைகளையும் அந்த அறப்படி வங்களுடன் இசைவிக்க முயன்றார்கள். இத்தகையவர்கள் இயற்கைப் பரப்பை இயக்கி ஆட்கொள்ளும் ஒரு தனி முதலை நோக்கித் தங்கள் வணக்க வழிபாடுகளை ஆற்றி வந்தனர்.
தொல் முதல் குடிகளான வில்லவரும் மீனவரும் எத்தகைய தெய்வங்களையும் வணங்கினதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் வாழ்ந்த, தொல் பழங்குடியினரை வென்ற முதல் இனத்தவரான நாகர்கள் அச்சந்தரும் பெண் தெய்வமாகிய காளியை வணங்கினார்கள். அவள் கோயிலில் எருமைகள் பலவற்றைப் பலி தந்தார்கள்.
காளி உருவம் மிகவும் நடுக்கந்தரும் முறையி ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. அவள் சடைமுடிகள் அணி முடி போலத் தலையுச்சியில் சுற்றுப்பட்டு, ஓர் இள நாகத்தின் பளபளப்பான தோலால் வரிந்து கட்டப்பட்டிருந்தன. பன்றியேற்றின் வளைந்த தந்தம் அவள் தலைமுடியின்மீது ஒரு பிறைபோலச் செருகப் பட்டது.புலிப்பல் மாலை ஒன்று அவள் கழுத்தை அணி செய்தது. வரிப்புலியின் தோல் அவள் அரையைச் சுற்றிய ஆடையாயிற்று.
வலிமை வாய்ந்த வில்லொன்று எய்யும் நிலையில் வளைக்கப் பட்டுத் தேவியின் கையில் வைக்கப்பட்டது. கவர்க்கொம்பு களையுடைய ஒரு நெட்டையான கலைமான் மீது அவள் அமர்ந்திருந்தாள்.
அவள் உருவத்தின்முன் பறைகள் கொட்டப்பட்டன. காளங்கள் இரைந்தன. இவற்றின் ஆரவாரத்திடையே கொடுந் தோற்றமுடைய நாகர்கள் அவள் பலிபீடத்தின் முன் எருமை களைப் பலியிட்டனர். பலி விலங்குகளின் உடலிலிருந்து குருதி கொட்டும் சமயம் தெய்வ மகள் வெறிகொண்டு நடுக்கும்