(376
அப்பாத்துரையம் - 26
உடலுடன் ஆடுகிறாள். அவள்மீது காளி வெளிப்பட்டுக் கூக்குரலிடுகிறாள்: "சூழ்ந்திருக்கும் ஊர்களிலுள்ள தொழுவங் களிலெல்லாம் எருதுகள் நிரம்ப உள்ளன. ஆயினும் எயினரின் முற்றங்கள் வெறுமையாகக் கிடக்கின்றன. திருட்டு, கொள்ளை ஆகியவற்றால் வாழவேண்டிய எயினர் ஊர்வாழ் மக்கள் போல அமைந்த வாழ்க்கை யுடையவர்களாகி விட்டார்கள். கலைமான் ஏறிவரும் காளிக்குரிய பலிகளை நீங்கள் கொடுக்காவிட்டால், அவள் உங்கள் விற்களுக்கு வெற்றி உண்டு பண்ணித் தரமாட்டாள்,” என்று கூறுகிறாள்.
காளி பெண் தெய்வமாதலால், அவள் அடியார்கள் அவளுக்குத் தமிழ்ப் பெண்டிர் வைத்து விளையாடிய பந்துகள் பொம்மைகள், பச்சைக்கிளிகள், கானாங்கோழிகள், மயில்கள் ஆகியவற்றை வழங்கினார்கள். மனச்சாந்தும் மணத்துகளும், நறுஞ் சந்தணமும், அவித்த மொச்சை வகை, கூல வகைகள், குருதியும் கறியும் கலந்த சோறு ஆகியவையும் அவள் கோயில்களில் படையல் செய்யப்பட்டன?
தமிழரசர்களால் நாகர்களே பெரும்பாலும் படை வீரர்களாய் அமர்வு பெற்றதனால், அவர்கள் தெய்வமாகிய காளியே நாள டைவில் வீர வகுப்பினரின் காவல் தெய்வம் ஆயினாள். படை வீரர் மட்டுமன்றி படைப்பணித் துறைவரும் மன்னரும் படை நட வடிக்கை எதிலும் ஈடுபடுவதன் முன் அவளுக்குப் படையல் வழங்குவதிலும் அவள் தயவை எதிர்ப்பார்ப்பதிலும் ஒன்றுபட்டு முனைந்தனர். பற்றார்வ வெறியில் படைவீரரில் சிலர் மன்னர் படைகளுக்குக் கட்டாய வெற்றி தரும் எண்ணத்துடன் தம் உயிர்களையே அவள் பலி பீடத்தில் படையலாக்கத் துணிந்தனர்.
தமிழில் காளி ஐயை என்றும் அழைக்கப்படுகிறாள். ஏழு உடன்பிறந்த நங்கையருள் அவளே கடைசி நங்கை என்று கருதப் படுகிறாள்.அவள் சிபெருமானை ஆடற் போட்டிக்கு அழைத்தா ளென்றும், தாரகன் என்ற அரக்கன் வலிமை வாய்ந்த உடலை இரு கூறாகப் பிளந்தாளென்றும் கூறப்படுகிறது.
நடுக்கந் தரும் தோற்றமுடைய இத் தேவியிடம் மக்கள் கொண்டிருந்த பேரச்சத்திற்கு ஒரு சான்று உண்டு. ஒருக்கால் அவள் கோயிலின் கதவுகள் திறவாதிருந்தன. திறக்கமுடியவில்லை.