ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
379
கிறது. அவன் அண்ணன் பலராமன் பாரிய உடல்வலிமைக்குப் பேர்போனவன்5
5
தமிழரில் உணர்வகுப்பினரிடையே போற்றப்பட்ட தெய்வம் சிவபெருமான்.செஞ்சடையும் செந்நிறமும் உடையவராக இவர் கற்பிக்கப்படுகிறார். அவருக்குக் கண்கள் மூன்று. அவர் புலித் தோலாடையுடுத்து, மழுப்படை ஏந்தி எருதுமீது இவர்ந்து செல்கிறார். முக்கண் நீங்கலான மற்றக் கூறுகளில் நாகரிக முதிராக் காலத்திலுள்ள இமயமலைப்பகுதி வாணர் தோற்றத்துடன் அவர் தோற்றம் முற்றிலும் பொருந்தியதே. ஏனெனில், இப்பகுதியி லுள்ள மக்களும் செவ்வண்ணமும் செந்தலை முடியும் உடையவர்கள். மலைப்பகுதிகளில் பயணம் செல்லும்போது அவர்கள் எருது களிலேயே ஏறிப்போகின்றார்கள்.
அவர் உறைவிடம் பனிமூடிய கயிலைமலை. அது இமய மலைக்கு வடக்கே, இந்து கங்கை பிரமபுத்திராத்தலை யூற்றுக் களுக்கு அருகில் உள்ளது. அவர் மிகப்பெருவீரச்செயல் திரிபுரம் அல்லது முப்புங்களை அழித்ததே. தேவர்களுக்கு மிகுந்த தொல்லைகள் தந்த அசுரர்களின் அரண்களாக அவை விளங்கின.
இத் தெய்வம் மலையரசன் மகள் பார்வதியை மணந்தார்.
தமிழகத்தில் குடியேறிய பார்ப்பனர் இயற்கைப் பொருள் களின் வணக்கத்தை அப்போதும் விட்டுவிடவில்லை. அவர்களில் சிலர் அந் நாளிலும் வேதகாலத்தைப்போலவே தம் இல்லங்களில் திருமுத்தீ பேணிவந்தார்கள். வேள்விகள் அல்லது சமயப் பலியீடுகள் ஆற்றுவதற்கு அவர்கள் முதல் முக்கியத்துவம் தந்தனர். அவை மிகப்பாரிய அளவில், பொதுவாக அரசன் ஆதரவில் நடைபெற்றன. அகல்விரிவுடைய திருவினைகளுடன் குதிரைகளோ, பசுக்களோ பலியிடப்பட்டன. அவை மிகுந்த மறைவடக்கத்துடன் அகன்ற கண்டிப்பான கடிகாவலுடைய பெரு வளைவுகளுக்குள் நடைபெற்றன.பலியிட்ட உயிரினங்களின் தசைகளைப் பார்ப்பனர் தின்றனர்.
வேதத் திருவினை முறைகளில் தனிப் பயிற்சியுடைய தனிப் பட்ட குருமாரே வேள்விகளைச் செய்தனர். அதற்கான செலவு களை ஏற்று வேள்வியில் தலைமை தாங்கிய மன்னர்களுக்கு