ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
381
பூதம் பொன்னிறமானது. கைகளில் ஒரு கலப்பையும் ஒரு நிறை கோலும் தாங்கிற்று. இவை உழவுத்தொழிலும் வாணிபத் தொழிலும் குறித்தன. நான்காவது கருநிறமுடையது. கரிய ஆடையஉடுத்தது. பாணர்கள், கூத்தர்கள், முரசறைவோர். இசைவாணர் ஆகியோரைக் குறித்த பல இசைக்கருவிகளை இது கைக்கொண்டிருந்தது.
பார்ப்பனீயக் கோயில்களின் வழிபாட்டு முறைமையில் திருவுருவங்களைக் காலையில் குளிப்பாட்டல், ஆடையணிதல், அணிமணி மலர்மாலை சூட்டுதல், நாள்தோறும் இரண்டு அல்லது மூன்று தடவை பழம், இனிய பண்டம், சமைத்த சோறு வழங்குதல், ஒவ்வொரு தடவையிலும் தெய்வத்தின் பெயர் களையும் புகழையும் ஒரு குறிப்பிட்ட எண்ணளவு உருச்செய்தல் ஆகியவை அடங்கி யிருந்தன. வழிபாட்டு முறையில் கண் கூசவைக்கும் ஆரவாரம், புலன்களுக்கு அது தந்த கவர்ச்சி ஆசியவை எங்கும் பொதுவாகவும், பெருங்கோயில்களில் சிறப்பாகவும் கல்லா மக்களின் உள்ளத்தை ஈர்ப்பதா யமைந்தன. ஆனால், அவற்றால் அறிவார்ந்த தூயபக்தி உணர்ச்சி ஏற்படுவதற் குரிய சூழல் ஏற்படவில்லை.
பார்ப்பன எதிர்ப்புச் சமயங்களில் தமிழரிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றவை நிகண்ட நெறியும் புத்த நெறியுமேயாகும். இவ் விரண்டு சமயங்களும் வேதத் திருவினைகளையும் வினை முறைகளையும் பயனற்ற பாடெனக்கொண்டன. பார்ப்பனர் வலிந்து தாமே மேற்கொண்ட சிறப்புரிமை முற்றிலும் போலியான தற்செருக்கெண்ணம் ஆகும் என்று கூறினர்.
நிகண்டநெறி புத்தநெறியைவிடப் பழமைவாய்ந்தது. நிகண்டர்கள் புத்தர்களைப் பாசண்டர்கள் அதாவது சமயப் பகைவர் என்றழைத்தனர்.இந்நிகண்டர்கள் அருகனை வணங்கினர். இயற்கையை ஆளும் மூலமுதலிறிவுப்பொருள் அவனே என்று கொண்டனர். அவர் திருவுருவம் பொதுவாக ஒரு முக்கடை நீழலில் ஒரு அசோகமரத்தின் கீழ் உட்கார்ந்த அல்லது நின்ற நிலையிலுள்ள ஒரு ஆடையற்ற மனித உருவமாய் இருந்தது.8
8
அவர்கள் இரண்டு தலையான உறுதிமொழிகளை மேற்கொண்டிருந்தனர். ஒன்று பொய்யுரை கூறக்கூடாதென்பது. மற்றொன்று உயிர்பொரு ளெதுவும் கொல்லக்கூடா தென்பது.