(390)
அப்பாத்துரையம் - 26
தற்போதைய தமிழகம் மேற்குத் தொடருக்குக் கிழக்கில் திருப்பதிக்கும், கன்னியாகுமரிக்கும், இடைப்பட்ட தாழ்நிலம் என்று வரையறுத்துக் கூறலாம். சென்ற எட்டு நூற்றாண்டு களாகத் தமிழர்கள் குடியேறியுள்ள இலங்கையின் வடபகுதியும் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட இடமுண்டு.
இந்த குறுகிய எல்லைக்குள்ளும் கூடத் தமிழினம் அடிக்கடி அயலினங்களின் பெருவரவால் முற்றிலும் அழிந்துவிடும் இடர் நிலை வாய்ந்த நெருக்கடிகளுக்கு ஆளானதுண்டு. ஆனால் புடை யெழுந்த அயலினங்கள் நாட்டை முற்றிலும் நிரப்புவதற்கு முன் இறையருள் முன்னின்று அவ்வெழுச்சிகளைத் தடுத்தாட் கொண்டுள்ளது என்னல் வேண்டும். தெக்கணத்திலிருந்து கன்னடியர், முகலாயர், தெலுங்கு நாயக்க மரபினர், மராட்டியர், மற்ற முசல்மானிய அரசியல் வேட்டத்தார் ஆகியோர் சென்ற ஆறு நூற்றாண்டுகளில் ஒருவர் பின் ஒருவராகத் தமிழகத்துக்குட் புகுந்து தமிழர் தடத்தையே அழித்துவிடும் நெருக்கடிகளை உண்டு பண்ணியுள்ளனர்.
அளவு
இறுதியில் மேம்பட்ட உரம்வாய்ந்த வெளிறிய முகம் படைத்த ஓரினத்தவர் வானகத்திலிருந்து திடுமெனவந்ததுபோல வந்து சேர்ந்து, தமிழரையும் இந்தியாவிலுள்ள பிற இனத்த வர்களையும் அரசியல் குழப்ப நிலைகளிலிருந்தும், ஆட்சிக் குளறுபடிகளிலிருந்தும் காத்து ஆண்டுள்ளனர். தொலை தூரத்தி லுள்ள ஒரு தீவிலிருந்து அவர்கள் ஆரிடர் மிக்க மாகடல்கள் கடந்து தம் வாணிக வளர்ச்சிக்குரிய புதிய வாணிகக் களங்கள் நாடி வந்தனர். அமைதி வாய்ந்த வணிகராக வந்து காலூன்றிய அவர்கள் தங்கள் ஒற்றுமை, ஊக்கம், அறிவுத்திறம் ஆகியவற்றால் ங்கே மொகலாயரோ, மகதப்பேரரசரோ ஆண்ட பேரரசுகளை விடப் பாரிய பெரும் பேரரசை நிறுவினர். ஆங்கில நாட்டின் க் காவலின்கீழ் தமிழர் இன்று தங்குதடையற்ற ஆழ்ந்த வாழ்வமைதி பெற்றுள்ளனர்.6
இக்காரணதாலேயே தமிழர் வாழ்வில் இன்று உலகெங்கணும் காணமுடியாத தனிப்பட்ட ஒரு பண்பைக் காண்கிறோம். சென்ற இரண்டாயிர ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கள் மொழியையோ நாகரிகத்தையோ கிட்டத்தட்ட மாறா நிலையில் வைத்துக் காத்துள்ள உலகின் ஒரே இனம் தமிழினமே.