(394) ||
அப்பாத்துரையம் - 26
வர்களாவோம்; மனித இனத்தின் இழிந்த குற்றேவல் மாக்களாகவே நாம் அமைந்துவிடவும் நேரும்.
இவ்வாறு செய்யாமல், மேனாட்டு நாகரிகத்தின் மொத்த முன்னேற்றத்தைப் பின்பற்றித் தொடர்ந்தும், அதே சமயம் அதில் காணப்படும் வழுக்களை மேற்கொள்ளாதகற்றியும் வந்தால், வகுப்புக்கு வகுப்பு ஒத்துழைப்புப் பண்பை இடைநின்று தடுத்து மக்களின் அறிவும் ஊக்கமும் மரக்கச்செய்து பாழ்படுத்தும் சாதி விலங்கை உடைத்தெறிந்தால், நம் பெண்பாலருக்குக் கல்வி தந்து அவர்களை அறிவுடைய மனைவியராகவும் அன்னையராகவும் பயிற்றுவித்தால், தொழில் நுணுக்கக் கல்விநிலையங்கள் நிறுவி அறிவியல் புத்தாராய்ச்சிகளை நாம் ஊக்கினால்; வெறுங் கைத் தொழிலாளிகள் இயந்திரங்களுடன் போட்டியிட முடியா தென்பதை உணர்ந்து இயந்திரப்பொறிகளைத் தொழில்களில் ஈடுபடுத்த முனைந்தால், உருவ வணக்கத்தையும், குறுகிய சமயக் கிளை, உட்கிளைச் சிறுபூசல்களையும் விடுத்து; இந்து சமயத்தைச் சீர்திருத்தி அதனை ஒரே உயிர்ப்பற்றுடைய தெய்வ வழிபாட்டு முறையாக்கினால், நாம் வளம்பெற்று வாழ்ந்து ஓங்குவது உறுதி! இந்துப் பேரினத்தின் ஒரு பகுதியாய் உலகப் பேரினங்களிடையே மதிப்பு வாய்ந்த ஓர் இடம் பெறுவதிலும் ஐயம் இராது.
ம்
இச் செய்திகளில் யாராவது ஒருவர் வந்து தொடங்கி வழிகாட்டுவது வரை நம் மக்களில் ஆற்றலும் அறிவுமுடை யவர்கள் காத்திருக்கத் தேவையில்லை. இக் கருத்துக்களை மெல்லத் தம் குடும்பங்களிலும், உறவுமுறைச் சூழல்களிலும் பரப்பி, கூடுமானவரை எத்தகைய கிளர்ச்சிகரமான மோதலுக்கும் இடமில்லாமலே அதைச் செயலுக்குக் கொண்டுவருவோ மானால், நம் சமுதாயத்தைக் காத்தவர்கள் என்று புகழ்ப்பெயரை நாம் வருங் காலத் தலைமுறைகளில் நிலைநாட்டியவர் களாவோம்.
அடிக்குறிப்புகள்
1. இது தற்போது கல்கத்தாவுக்கு 35 கல் தென்மேற்கில் ஹுக்ளியின் கிளை ஆறான ரூப்நாராயணனின் கரையிலுள்ள 'தமிழ்க்' என்னும் இடமேயாகும். மச்ச, விஷ்ணு புராணங்களும் பிற புராணங்களும் தாழ்நில வங்காளத்தில் தாமிலத்திகள்