ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
395
அல்லது தாம்ரலிப்தர்கள் என்ற தனி இனத்தவர் வாழ்ந்து வந்ததாகக் குறிக்கின்றன.
2. நிலக் குறுக்கமும் மொழி எல்லைக் குறுக்கமும் தான் பெரிதும் ஏற்பட்டுள்ளன. மூல ஆசிரியர் இங்கே குறிக்கும் நாட்டு விரிவு கரிகாலன் காலமுதல் காடு வெட்டி நாடு திருத்தியதையும் பாசன வசதிகளால் வாழ்விடம் பரப்பியதையும் ஆற்று வண்டல் நிலம் கடற்கரையில் மேடிட்டுப் புது நிலம் கண்டதையுமே பற்றியதென்று தோற்றுகிறது.
3.
4.
5.
Tiruvallum.
Kotta River.
இலங்கைத் தமிழகம் பற்றித் தமிழரிடையே பரப்பப்பட்டு வந்துள்ள தவறான கருத்து இலங்கைத் தமிழரும் பேரறிஞருமான ஆசிரியர் கூற்றில்கூடப் புலப்படுகிறது. எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்து தான் தமிழர் அங்குக் குடியேறியுள்ளனர் என்பதும் வரலாற்றுக்கியைந்த உண்மையாகத் தோற்றவில்.ை ஆசிரியர் விரித்துரைக்கும் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கடைச் சங்க காலப்பிற்பகுதிக்கு நீண்டநாள் முற்பட்டே, கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் ஏலாரா என்ற தமிழரசன் இலங்கை முழுதும் ஆண்டான். முதற் சிங்கள அரசன் காலத்திலேயே தமிழக மன்னர்க்கும் மக்களுக்கும் இலங்கை மன்னர்க்கும் மக்களுக்கும் திருமணத் தொடர்பும் அரசியல் தொடர்பும் இருந்தன. இராவணன் தமிழரசன் என்றும், தமிழகப் பகுதியில் ஆண்டதாக மரபுரை குறிக்கிற மாவலியுடன் அவன் தொடர்புடையவன் என்றும் கருதப்படுகிறது. தவிர, கடலுள் ஆழ்ந்த தமிழகப் பகுதி இலங்கையை முன்னோ, பின்னோ உட்கொண்டிருந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. தற்போதைய சிங்களப் பகுதிகளிலே முன்பு தமிழர் வாழ்ந்ததற்குரிய மொழித்தடங்களும் பண்பாட்டுச் சுவடுகளும் இன்றும் உள்ளன. இலங்கை அறிஞராகிய முதனூலாசிரியர் இவற்றைக் கவனிக்காதது வியப்புக்குரியரே. ஆனால் தமிழகத்தைத் தம் தாயகம் என்று கருதுவதில் ஈழத் தமிழர் கொண்டுள்ள ஆர்வமே எல்லாத் தமிழரும் குடியேறிய தமிழர் என்ற தவறான கருத்தைப் பரப்பி வந்துள்ளது.
வரலாற்றுக்கு எதிராக, திருவாங்கூர்த் தமிழரும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது தம்மைப் பழங்குடியேற்றத்தார் என்று கருதி வந்ததுண்டு. தமிழகம் தாழ்ந்த காலத்திய சூழல்களின் பண்புச் சின்னங்களே இக் கருத்துக்கள் என்று கருத இடமுண்டு.
6. பிரிட்டிஷ் ஆட்சி நடுவில் எழுதப்பட்ட முதனூலின் மூல ஆசிரியர் ஆங்கில ஆட்சிபற்றிக் கூறிய செய்திகள் அடிப்படையில் சரியானவையே. தமிழரைப் பற்றிய மட்டில் விடுதலைபெற்ற இந்தியாவில் தமிழர் பிரிட்டிஷ் ஆட்சியில் பெற்ற பண்பாட்டு வளர்ச்சி வாய்ப்பை வளர்த்துள்ளனர் என்று கூறமுடியாது. ஆயினும் ஆசிரியர் ஆங்கில ஆட்சியார்வம் சற்று மிகைப்பட்டதேயாகும். தாய்மொழி என்ற வகையில் தமிழின நிலைமை சற்று மேம்பட்டாலும், தமிழின் பீடும் பெருமைகளும் சமஸ்கிருதத்தளவு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலோ, அதன் பின்னரோ கூட விளக்கம் பெற வாய்ப்பளிக்கப்பட வில்லை என்பதில்