இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எந்தமிழ் இனநலம் காப்பது தவறா?
எதனைக் காவா விடினும் தமிழர்
எந்தமிழ் மொழியையும் மரபையும் காக்க! அதுதான் தமிழினம் அழியாது காக்கும் ! அதுதான் தமிழகம் இழியாது தேக்கும் ! புதிதாய்ப் பிறந்தவர் அனைவரும் உலகில் புல்லிய தம்மொழி, இனநலம் காக்கையில் எதுதான் தோன்றிய காலம்என் றறியா எந்தமிழ் இனநலம் காப்பது தவறா ?
அவரவர் மொழிதான் அவரவர் இனத்தை அழியாமற் காக்கும் ஆணிவேர் ஆகும்; அவரவர் மொழியை அவரவர் இனத்தை அழியாமற் காக்கத் தமிழை அழிப்பதா? எவரெவர் மொழியும் இனமும் வாழ எருவாய் உழைத்தே தமிழினம் வீழ்வதா ? தவறாது தமிழர் தம்மொழி பேணுக ! தாழாமல் முதலில் தம்இனம் காக்கவே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் கனிச்சாறு - 2
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு. தியாகராயர் நகர்.
61060T600601 - 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654