பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

35

டாலமியால் குறிக்கப்பட்ட உள்நாட்டு நகர்களுக்குள், சேலூர் என்பது செயலூரே என்னலாம்.7 இது தமிழ் ஏடுகளில் அடிக்கடி குறிக்கப்படுகிறது. இலங்கைக்கும் பாண்டியநாட்டுக் கடற்கரைக்கும் இடையேயுள்ள கடல் ஆர்கலி என்று அழைக்கப் பட்டது. அதனை டாலமி ஆர்கலிக்குடா என்று குறிப்பிடுகிறார். இக்கரையின் முக்கிய நகரம் தொலைப்புகழ் பெற்ற சாலியூர். இது இடர் நிறைந்த ஆழ்கடல் கடந்துவரும் கப்பல்கள் பல வந்து குழுமி விலையேறிய சரக்குகளை இறக்குமிடம் ஆகும். அச் சமயங்களில் அக் கப்பல்களின் பாய்மர உச்சியில் கொடிகள் பறக்கும். சரக்குகள் வந்துள்ளதை வணிகருக்குத் தெரிவிக்கும் முறையில் கரையில் முரசங்கள் முழங்கும்.8

உள்நாட்டில் உள்ளதாக டாலமி குறிப்பிடும் நகர்களில் கீழ்வருவனவற்றை உறுதியாக அடையாளமறியலாம்.

தைனூர்-தேனூர் (மதுரை மாவட்டத்தில் திருச்சுழி வட்டத்தில் உள்ளது). இது தமிழ்ப்பாடல்களில் தேர்வண் கோமான் 9 என்ற தலைவன் தலைமையிடமாகக் குறிக்கப்படுகிறது.

தங்கலா அல்லது தாகா-திருத்தங்கல் (திருநெல்வேலி மாவட்டத்தில் சாத்தூர்த் தாலுக்காவில்100 உள்ளது). தங்கல், வியலூர் ஆகிய நகரங்களின் வரி வருவாய் மதுரையிலுள்ள அம்மன் கோயிலுக்கு மானிமாக்கப்பட்டிருந்தது என்று சிலப்பதிகார ஆசிரியர் குறிப்பிடுகிறார்!01

று

மோதூரா-பாண்டியன் தலைநகர். இது தற்கால மதுரை லிருந்து தென்கிழக்காக ஆறுகல் தொலைவில் உள்ளது.

பாண்டிய நாட்டின் வடக்கே வேட்டுவர் அல்லது வேடர்நாடு இருந்தது1°2. இது பன்றிநாடு அதாவது பன்றிகள் நிறைந்த நாடு என்றும் குறிக்கப்பட்டது. இதன் தலைநகரம் நாகை அல்லது நாகப்பட்டினம். அக்காலத்திலுள்ள தமிழ்ப்பாடல் களிலிருந்து இந்நகரத்தைப்பற்றி எதுவும் தெரியவில்லை. இதிலிருந்துவேடருக்கும் மற்றத் தமிழ் மக்களுக்குமிடையே மிகுதி தொடர்பு இருந்ததில்லை என்று தோற்றுகிறது.

பன்றிநாட்டுக்கப்பால் புனல்நாடு அல்லது சோழ நாடு கிடந்தது. காவிரியின் கடல்முகத்தைச் சூழ்ந்த பகுதியை