பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

அப்பாத்துரையம் - 26

உட்கொண்ட இப்பிரிவு காவிரியின் புதுவெள்ளத்தால் அடிக்கடி வெள்ளப் பெருக்குக்கு உட்பட்டதனாலேயே இப்பெயர் பெற்றது. நாம் குறிப்பிடும் காலத்தில் ஆற்றுக்குக் குறுக்கே எத்தகைய அணையும் கட்டப்படவில்லை. கொள்ளிடம் என்ற கிளையைப்பற்றியும் நாம் கேள்விப்பட முடியவில்லை. உண்மையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திருச்சிராப்பள்ளி அருகில் ஓர் அணை கட்டப்பட்ட பின்பே இது புதிதாகக் கிளைத்ததாகத் தோற்றுகிறது.

சோழர் தலைநகரான உறையூர் காவிரியின் தென்கரையி லிருந்தது.இவ்விடம் இன்னும் உறையூர் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், அது தற்காலத் திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பேட்டை யாகியுள்ளது. இது அன்று ஒரு வலிமைவாய்ந்த மதிலாலும் அகழியாலும் சூழப்பட்டிருந்தது.03 அகழியைச் சூழ்ந்து முள்மரக் காடு ஒன்றும் இருந்தது. இங்கே நிகண்டரின் ஒரு பழைய பள்ளி இடம்பெற்றிருந்தது. அதிலுள்ள அருகர் உருவம் முக்குடையின்கீழ் அசோக மர நீழலில் அமர்ந்திருந்தது.

உறையூரைவிட முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரம் காவிரிப் பூம்பட்டினம். அது காவிரியாற்றில் கடல்முகத்திலிருந்தது அது ஒரு பெரிய வாணிகக்களம். சிலப்பதிகாரம், பட்டினப்பாலை

கிய பாடல்களில் இந்நரின் முழு வருணனைகள் நமக்குக் கிட்டுகின்றன.04 இது புகார் என்றும் காகண்டி என்றும் பெயர் பெற்றிருந்தது. ககண்டன் என்ற ஒரு தலைவன் ஆண்ட தனாலேயே அது காகண்டி என்று பெயர்பெற்றதாகத் தோற்றுகிறது.கி.மு.1அல்லது 2-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பரோத் கல்வெட்டுக்களில்105 அப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுக் ககண்டியிலுள்ள சொர்ணம் என்ற பெண் துறவியின் மானியத்தைப் பதிவுசெய்கிறது!

106

காவிரி ஆறு அன்று அகலமும் ஆழமும் மிக்கதாய் ருந்தது. அதனுள் பளுவேறிய சரக்குகளைச் சுமந்த கப்பல்கள் பாய்மடக்காமலே தொகுதி தொகுதியாக வந்து புகுந்தன. காவிரிப்பட்டினம் இரு பாகங்களாகப் பிரிவுற்றிருந்தது. ஒன்று மருவூர்ப்பாக்கம் என்பது. இது கடற்கரை யடுத்திருந்தது. மற்றது பட்டினப்பாக்கம் என்பது. இது அதன் மேல்கரையிலிருந்தது. இந்த இரு பகுதிகளுக்கு மிடையே ஒரு திறந்த பெருவெளி