பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 26

சொல்லதிகாரம், பெயரியல், சூத்திரம் 14-16 இல், போதிய நல்ல காரணங்கள் காட்டிச் சங்கரநாமச்சிவாயர் செந்தமிழ் நாட்டின் இந்த எல்லை விளக்கத்தை முற்றிலும் மறுத்திருக்கிறார். அது பாண்டி நாட்டைக் கட்டாயம் உள்ளடக்கியிருக்கவேண்டுமென்றும், சோழநாடு அல்லது புனல்நாட்டைக் கட்டாயம் விலக்கியிருக்க வேண்டுமென்றும் அவர் கருதியுள்ளார்.

37. பூழிநாடு, குடநாடு ஆகிய பெயர்கள் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மலபாரை மைசூர் வென்று கைக்கொண்டநாள் வரையிலும் முற்றிலும் வழக்கிறந்துபடாமல் நிலவின என்று தோற்றுகிறது. ஆனால் அப்பெயர்கள் பயநாடு பொலநாடு, குட்டநாடு என்று திரிபுற்றிருந்தன. பயநாடு தற்காலக் "குவிலாண்டி" நகரத்தை அடுத்த 9 அம்சங்களையும், பொலநாடு கோழிக்கோட்டை (Calicut) அடுத்த 22ஆம் அம்சங்களையும் உட்கொண்டவையாயிருந்தன குட்டநாடு இன்றைய பொன்னானித் தாலுகாவின் 24 அம்சங்களைக் கொண்டதாயிருந்தது மலபார்க்கையேடு (Malabar Manual) ஏடு, 1: பக்கம், 647-666.

38.

39.

40.

41.

42.

ம்

சிலப்பதிகாரம் 25: 9-12 பெரியாற்றின் கடல்முகத்தருகிலுள்ள பிற்காலச் சேர அரசின் தலைநகரான திருவஞ்சைக் களத்தையே சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கரூராகக் கொண்டார். ஆனால், டாலமி ஆற்றங்கரையில் ஆற்றருகில் சிறிது உள்நாட்டில் மேற்படச் சென்று அதைக் காண்கிறார். டாலமி கொண்டதே சரி என்று எனக்குத் தோற்றுகிறது.

ஆசியக்கழக நாளேடு (Journal of the Asiatic Society) ஏடு II, பக்கம் 336. பழைமைக் கூறுகளின் பட்டியல்கள், ஸீவல் (Sewell's Lists of Antiquities) ஏடு I பக்கம் 261.

மணிமேகலை 28: 2-68.

சிலப்பதிகாரலம் 26: 62, 30:51. ஆடகமாடம் என்பது தற்காலத் திருவனந்தபுரம் என்ற அரிபுரமே என்று உரையாசிரியர் கருதுகிறார். ஆனால் இம்முடிபுக்கு ஆதாரமாக நூலின் மூல பாடத்தில் எதுவுமில்லை.

மணிமேகலை 28: 127.

43. சிலப்பதிகாரம், பதிகம். அடி 1.

எருக்காட்டூர்த் தயாங்கண்ணணார்; அகம் 148.

44.

45.

பரணர், புறம் 343.

46.

47.

48.

பொய்கையார், புறம் 48.

குறுங்கோழியூர் கிழார், புறம். 17.

"கொத்தாறு இப்போது செல்லும் நெறியில் நேராகக் கடலுக்குச் செல்லாமல் இந்த (அகலப்புழை) வழியாகக் கடலுக்கு முன்பு. சென்றிருந்ததென்று தெரிகிறது. - மலபார்க்கையேடு (Malabar Manual) ஏடு 1 பக்கம் 12.

49. Tyndis a city, Bramagara, Kalaikkarias, Mouziris, an emporium.