பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

60.

அப்பாத்துரையம் - 26

விதியையும், எந்தத் தமிழ் இலக்கணத்திலும் என்னால் காணமுடியவில்லை என்று நான் ஒத்துக் கொண்டாக வேண்டும்.

துண்டிஸ் என்பது பள்ளிக்கரையருகிலுள்ள தொண்டியே என்ற என் கருத்துக்குரிய தடை ஒன்றே ஒன்று தான். அது முசிரிஸ் அல்லது கொடுங்கோளூரிலிருந்து 800 ஸ்டாடியா தொலைவில் உள்ளது. செங்கடற் பயணத்தில் குறிப்பிடப்பட்டது போல 500 ஸ்டாடியாவி லில்லை. ஆனால் கப்பல் வேகத்தை ஒழுங்காகப் பதிவு செய்வதற்குரிய இயந்திரக் கருவிகளில்லாத அந்த முற்பட்ட காலங்களில், கடற்பயண வேக மூலம் தொலையளவுகளை மதிப்பிடுவதென்பது அவ்வளவு திட்பமுடையதாய் இருந்திருக்கக் கூடுமென்று எதிர்பார்க்க முடியாது.

முசிறி என்பது முயிரிக்கோட்ட முயியே. இதுபற்றி யூல் கூறுவதாவது. மலபார்க் கல்வெட்டுக்களில் மிகப் பழமையானவற்றிலிருந்து அது கிராங்கனூர் என்ற கொடுங்கோளூர் அரசர் தலைநகரமாய் இருந்ததென்று தோற்றுகிறது. தற்போது தடமற்றுப் போயிருக்கும் அந்நகரம் இதுவே என்று கண்டிப்பாய் ஒத்துக் கொள்ளலாம். மலபாரின் மரபுரைகள் யாவுமே ஒருமிக்க இந்தக் கிராங்கனூரையே மலபாரின் புகழ்மிக்க மிகப்பழமை வாய்ந்த துறைமுகம் என்று கூறுகின்றன. கிறிஸ்தவர் மரபிலும் அதுவே திருமாணவர் தூயதிரு தாமஸ் வந்திறங்கிய இடம் ஆகும் -மக்கிரிணடிலின் டாலமி பக். 51.

61. பக்கரை திருவாங்கூரில் கானெட்டிக்கும் கொல்லத்துக்கும் இடையே இருக்கவேண்டுமென்று யூல் ஊகித்துள்ளார் - மக்கிரிண்டிலின் டாலமி, பக்கம்.

62.

134.

Neacynid.

63. Peutingerian Table.

64. Nincylda.

65. Ravenna.

66.

Nillcinna.

67.

68.

69.

70.

புறம். பாட்டுக்கள் 127-136.

Pounnata.

Aloe.

கால்டுவெல் கூறுவதாவது. கரூரா (Karoura) தமிழ் மரபுரைகளில் சேர அல்லது கேர அல்லது கேரள அரசரின் பண்டைத்தலைநகரமாகக் குறிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அது முன்பு சேர நாட்டுடன் சேர்ந்திருந்த கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள கரூர் என்ற முக்கியமான நகரமாகக் கருதப்படுகிறது. அது காவிரியின் கிளை ஆறுகளுள் ஒன்றான அமராவதியின் இடது கரையில் தற்போது அழிந்துபட்டுக் கிடக்கும் கோட்டை அருகே உள்ளது (முன்னுரை பக்கம். 96-97) இக்கருத்துக் “கரூரா”, “கரூர்" என்ற பெயர் ஒற்றுமை ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு எழுந்தது. நான் இங்கே மேற்கோளாகக்