பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

51

கொண்டுள்ள பண்டைத் தமிழ்நூல்களை டாக்டர் கால்டுவெல் அறிந்திருக்கக் கூடுமானால் இப்பிழைப்பட்ட கருத்தை மேற்கொண்டிருக்க மாட்டார்.

71. Videris.

72. Pithara.

73. Adarima.

74.

Atharimalai.

75. கோழிக்கோட்டுப் பகுதியில் மிளகுக்குப் பேர்போன மாவட்டமாகிய கடத்த நாடு (Kadathanadu) என்பதே கொட்டனாரா என்று டாக்டர் புச்சானன் (Dr. Buchanan) கருதினார். டாக்டர் பர்னல் (Dr. Burnel) தலைச்சேரி அடுத்துள்ள கொளத்த நாடே அது என்று எண்ணினார். அதுவே மிளகு வளமுள்ள பகுதியென்றும் அவர் கூறுகிறார். (மக்கிரிண்டிலின் செங்கடற் பயணம் பக்கம், 132). ஆனால் கொட்டனாரா என்ற பெயரைத் தமிழ் நாட்டின் பண்டைப் பிரிவுகளின் பெயர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கொட்டனாராவும் சூட்டநாடும் ஒன்றே என்பது தெளிவாக விளங்கும்.

76. மணிமேலை, 13: 3-7.

77.

78.

79.

சிலப்பதிகாரம், 15: 14-15, 27: 68-69,110

கலித்தொகை பாட்டு 104; அடிகள் 1-4. சிலப்பதிகாரம், 20, அடிகள் 17-22. "பஃறுளியாறும் பல குன்றுகள் சூழ்ந்த (=? பன்மலை யடுக்கத்துக்) குமரிக்கோடும் சினங்கெழு கடலுள் ஆழ்ந்தன”. உரையாசிரியர் அடியார்க்குநல்லார் இதனுடன் பஃறுளி ஆற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையே 700 காவதப் பரப்புடைய நிலம் இருந்ததென்றும், அப்பரப்பு ஏழு தெங்க நாடுகள், ஏழு மதுரை நாடுகள், எழு முன்பாலை நாடுகள், ஏழு பின்பாலை நாடுகள், ஏழு குன்றநாடுகள், ஏழு குணகாரை நாடுகள், ஏழு குறும்பொறை நாடுகள் ஆகிய 49 நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்ததென்றும் குறிக்கிறார். ஆனால், இவ்விவரங்களுக்குரிய மேற்கோள் ஆதாரம் எதனையும் அவர்காட்டவில்லை.

கல்யாணியில் ஆண்ட அரசன் திஸ்ஸா ஆட்சியில் மாகாணம் கடற்பெருக்கில் அமிழ்ந்துவிட்டது. இது கிட்டத்தட்ட கி.மு. 200இல் ஆகும். (மகாவம்சம், எல்.ஸி. விஜயஸிம்ஹ முதலியார் பதிப்பு இயல் 22 பக்கம். 84). இராஜாவளியில் இதே செய்தி இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. "அந்நாட்களில் கடல் கல்யாணியிலிருந்து இரு பத்தொருகல் தொலைவிலிருந்தது. (கல்யாணியை யாண்ட அரசனால் வதைக்களாக்கப்பட்ட) சமய குருவின் வெம்பழியால் இலங்கையின் காவல்தெய்வங்கள் சினங்கொண்டு கடலெழுச்சியால் நிலம் அமிழச் செய்தன. திஸ்ஸராஜனுடைய இந்த நாட்களில் 10,000 பேரூர்களும், 970மீன்பரவர் சேரிகளும், முத்துக்குளிப்பவர்கள் வாழ்ந்த 400 சிற்றூர்களும் சேர்ந்து கல்யாணிப் பகுதியில் 12 இல் 11 பாகம் கடலால் விழுங்கப்பட்டது. (இராஜாவளி: ஏடு. II பக்கம் 180, 190). ஸர்ஜே.ஈ. என்னெட் இலங்கையின் முன்னைய பெரும்பரப்பு, அதன் பெரும்பகுதியின் கடலமிழ்வு ஆகிய மரபுரைகளை நம்பகமாகக் கொள்ளவில்லை. அவர் இதுபற்றி மேலும்