பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

57

தொலைவான ஒரு வழி கண்டுபிடித்தனர். இந்திய வாணிகத்தின் ஆதாயமும் இன்னும் விரைந்து கைவரலாயிற்று. இப்போது ஆண்டுதோறும் இப்பயணம் நடந்துவருகிறது. அக்கடல்களில் கடல்கொள்ளைக்காரர்கள் மிகுதியாதலால்,

வில்லாளர் படைவகுப்பு ஒன்று காவலாகச் செல்கிறது.

கப்பலில்

"முதன்முதலாக இப்போதுதான் இப்பயணங்களைப் பற்றிய சரிநட்பமான முழுவிவரங்கள் கிடைத்துள்ளன. ஆகவே எகிப்திலிருந்து பயணத்தின் போக்கு முழுவதையும் விரித்துரைப்பது கவர்ச்சி தரக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் இப்பயணங்களால் ஆண்டு தவறாமல் இந்தியா நம் பேரரசிலிருந்து குறைந்த அளவில் ஐந்தரைக்கோடி செஸ்டர்ஸ்கள் (4,86,979 ஆங்கிலப் பொன்கள்) கவர்ந்து செல்கிறது. இப்பெரும் பொருளினிடமாக அது தரும் சரக்குகளோ அவற்றின் மூலமதிப்பைவிட நூறுமடங்கு விலைக்கு இங்கே விற்கப்படுகிறது."

பயண விவரம் வருமாறு :-

8

“கடற்பயணம் வேனிற்கால நடுவில் அதாவது எரிமீன்’ எழுவதற்குச் சற்றுமுன் அல்லது எழுந்தவுடன் தொடங்குகிறது. 30 நாட்களில் வணிகர் அராபியாவிலுள்ள ஓகெலிஸ்" என்ற இடத்துக்கோ, அல்லது குங்குலியம் விளையும் பகுதியிலுள்ள கானே" என்னும் இடத்துக்கோ சென்று சேர்கிறார்கள். இங்கே மூன்றாவதாக ஒரு துறைமுகமும் உண்டு. இதுவே மூஸா2 என்பது. இந்தியாவுக்குச் செல்ல விரும்புகிறவர்கள் இங்கே அடிக்கடி செல்வதில்லை. குங்கலிய முதலிய அராபிய மணப்பொருள்களில் வாணிகம் செய்பவர்கள் அடிக்கடி இங்கே வருகிறார்கள். உள்நாட்டுப் பகுதியில் சப்பர்3 என்ற நகரம் இருக்கிறது. அது ஒரு நாட்டின் தலைநகரம். இதுவன்றி சனே4 என்ற மற்றொரு நகரமும் உண்டு. ஆனால் இந்தியாவை நாடிச் செல்ல விரும்புபவர்களுக்கு எளிதாகப் புறப்படத்தக்க இடம் ஒகெலிஸ் என்பதே."

66

'இங்கிருந்து ஹிப்பலாஸ் என்று அழைக்கப்பெறும் காற்றுடன் கடலோடிகள் சென்று நாற்பது நாட்களில் இந்தியாவின் முதல் வாணிகக் களமான முசிரிஸை அடைகிறார்கள். இந்தத் துறைமுகத்தில் இறங்குவது நல்லதன்று. ஏனென்றால், இதனரு கேயுள்ள நிட்ரியாஸ் என்ற இடத்திலேயே கடற்கொள்ளைக் காரர்கள் தாவளமிட்டிருக்கிறார்கள். இங்கே வாணிகச்