பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 26

அளந்தாலும், கடல் வழியே கப்பல் வேகத்தால் அளந்தாலும் ஒன்றுபோலவே 500 ஸ்டேடியாக்கள் தொலைவே உடையது.”

"நெல்குந்தா (நிர்க்குன்றம்) ஓர் ஆற்றங்கரையில் கடலிலிருந்து 120 ஸ்டேடியாத் தொலைவில் தொலைவில் இருக்கிறது. ஆனால், ஆற்றின் கடல்முகத்தில் பக்காரா (கோட்டயம் அருகிலுள்ள வைக்கரை) என்றொரு சிற்றூர் உண்டு. நெல்குந்தாவிலிருந்து வரும் கப்பல்கள் இங்கே நடுவழியில் நின்று சரக்குகளை ஏற்றிக்கொள்கின்றன. ஏனென்றால் ஆறு இங்கே ஆழம் குறைந்திருக்கிறது. அத்துடன் சகதி மேடுகளும் ஆழமற்ற திட்டுக்களும் அதில் மிகுதி."

“நெல்குந்தாவும் பக்காராவும் இரண்டுமே உள்நாட்டில் வாழ்கிற ஓர் அரசன் ஆட்சிக்கு உட்பட்டவை.?”

மிளகு, வெற்றிலை ஆகிய இரு சரக்குகளும் நாடி இத்துறை முகத்துக்குக் கப்பல்கள் மிகுதியாக வருகின்றன. பேரளவான மணப்பொருள்களை வணிகர் இங்கே கொண்டுவருகிறார்கள். இங்கே வரும் பிற இறக்குமதிப் பொருள்கள் புட்பராகக்கல், பொதுவகைத் துணிவகைகள் ஒரு சில, மைக்கல்,25 பவளம், சக்கிமுக்கிக்கல், கண்ணாடி, பித்தளை, ஈயம் சிறிதளவு, ஆனால், பருகஸாவில் உள்ளதுபோல ஆதாயகரமான இன்தேறல், பவள மனோசிலை,26 நேரியல் துணி, சவ்வீரம்,27 கோதுமை ஆகியவை. கோதுமை விற்பனைக்காகக் கொண்டுவரப்படவில்லை. கப்லோட்டிகளின் செலவுக்காகவே கொண்டுவரப்பட்டது."

""

"இங்கே கிடைக்கும் பொருள்களுள் முக்கியமானது உள்நாட்டின் முக்கிய விளைவான மிளகு. மற்றெல்லாப் பொருள் களையும் பார்க்க மிகுதியாக அது இத் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. இம்மிளகு கொட்டனாரிகள் (அதாவது குட்டநாடன்) என்ற பெயருடைய வகையைச் சார்ந்தது.தலைசிறந்த முத்துக்களின் பெருங்குவியலும் இங்கே வாங்கப் பெறுகிறது. மற்றும் தந்தம், பட்டு நூலிழை, கங்கைக்கரையி லிருந்து வரும் வெட்டிவேர், கிழக்குப் பகுதிகளிலிருந்து வரும் வெற்றிலை, பல்வேறு வகைப்பட்ட ஒளிக்கற்கள், வைரங்கள், மாணிக்கங்கள், பொன்னாட்டிலிருந்து28 அல்லது லிமுரிகேக்கு அப்பாலுள்ள