பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

63

காண்டு வரப்படுகின்றன. இந்த வாணிகத்தால் உறிஞ்சப்படும் எகிப்தின் வளமுழுவதும் இந்தக் கரையில்தான் வந்து சேரு கின்றன. அதுமட்டு மன்று. லிமுரிகெயின் விளைவு வளங்களும் வந்திறங்கும் துறை இதுவே.

66

தலை

"லிமுரிகெயையும் அதனை அடுத்த மண்டலங்களையும் தாண்டியபின் கடற்கரை கிழக்கு முகமாகத் திரும்புகிறது. கப்பல் தன் போக்கை இத்திசையில் திருப்பும் இடத்தில் தற்போது பலைசிமுண்டஸ் என்றும், முன்பு தப்ரோபேன் என்றும் அழைக்கப் பட்ட தீவு மேற்காகக் கடல் நடுவில் கிடக்கின்றது. தீவின் வடபகுதி நாகரிகமடைந்துள்ளது. ஆனால் நிலத்திலிருந்து அதை அடைய எப்போதும் 20 நாட்களுக்குக் குறையாமல் வேண்டி வருகிறது. அதன் முழுப்பரப்பு மிக மிகப் பெரியது. ஏனெனில் அது அசைனியாவின் (அதாவது ஆப்பிரிக்காவின்) எதிர் கரைவரை பரந்து கிடக்கிறது30. முத்துக்கள், மெல்லாடைகள், ஆமை ஓடுகள் இங்கே கிடைக்கின்றன.

"(கொமாரா,பாதுகா, சோபட்மா ஆகியவற்றின் கரையில்) உள்நாட்டில் நெடுந்தொலை தள்ளிக்கிடக்கும் மண்டலம் மசாலியா. மிக உயர்தர மெல்லாடைகளில் மிகப் பேரளவான தொகுதி இங்கே செய்யப்படுவதுதான். மசாலியாவிலிருந்து கடற்கரை கிழக்காக தேசரேனெ என்ற விரிகுடா கட செல்கிறது. இங்கே பொசார்க்" என்ற பெயருடன் வழங்கும் தந்தவகை கிட்டுகிறது.

டந்து

தமிழகத்தை வந்து கண்ட இந்த மேலை வாணிகர் யவனர் எனப்பட்டனர். கிரேக்க நாட்டவர் தம் மொழியை ‘அயவானேஸ்’31 (Iaones) என்று தான் குறித்தனர். யவன என்ற பெயர் இதன் திரிபே. பழைய சமஸ்கிருத காவியங்களிலும் யவன என்ற சொல் எப்போதும் கிரேக்கரையே குறிக்க வழங்கப்படுகிறது32. இதுபோலவே பண்டைத் தமிழ் நூல்களில் யவனர் என்ற பெயர் முற்றிலும் கிரேக்கர், உரோமர்களையே குறிக்க வழங்கப்பட்டது.

கவிஞர் நக்கீரர் பாண்டிய அரசன் நன்மாறனைக் கீழ் வாருமாறு பாடுகிறார்:-