பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

|| - - .

66

அப்பாத்துரையம் - 26

'வெற்றிவாள் ஏந்திய மாறனே! யவனர்கள் தங்கள் நன்கலங்களில் கொண்டுவந்த குளிர் நறுமதுவைப்பணிப்பெண்டிர் பொற்கலங்களில் ஏந்த, அவ்வினிய நறாமாந்திக் களிப்புடனும் அமைதியுடனும் உன் நாட்கள் கழிவன ஆக!33

இக்கவிஞர்களால் குறிப்பிடப்பட்ட யவனர்கள் எகிப்திய கிரேக்கர் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் செங்கடற் பயணத்தில் குறிப்பிட்டபடி, எகிப்திலிருந்து வந்த கிரேக்க வணிகர்களே மது, பித்தளை, ஈயம், கண்ணாடி ஆகிய பொருள்களை முசிறிக்கும் வைக்கரைக்கும் கொண்டுவந்து, அவற்றுக்கு மாற்றாக அத்துறை முகங்களிலிருந்து மிளகு, வெற்றிலை, தந்தம், முத்து, மெல்லாடை ஆகியவற்றை வாங்கிச் சென்றனர் என்று அறிகிறோம்.

கிரோக்கர்கள் எகிப்திலிருந்து ஜூலை மாதத்தில் புறப்பட்டு, 40 நாட்களில் முசிறிக்கு வந்து சேர்ந்தனர். மலபார்க் கரையில் அவர்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்துவிட்டு, டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் முசிறியிலிருந்து மீண்டும் புறப்பட்டனர். மலபாரில் அவர்கள் தங்கிய காலத்தில் அவர்கள் தங்கள் நாகரிகத்தை இயல்பாகவே தமிழரிடம் படிய விட்டிருப்பர்.

இந்தியக் கடல்களில் கடல்கொள்ளைக்காரர் தொல்லைகள் இருந்துவந்ததால், கிரேக்க வணிகர் தம் கப்பல்களிலேயே ஒரு கிரோக்க வில்வீரர் படைப்பிரிவை உடன் கொண்டுவந்தனர். எகிப்து இச்சமயம் உரோமர் ஆட்சியில் இருந்தது. ஆகவே, கிரேக்க வணிகருடன் வந்த வில் வீரர் உரோமப் படைவீரராகவே இருந்திருக்க வேண்டும். இந்த உரோம வீரர்களின் மேம்பட்ட படைக்கலங்களும் மேம்பட்ட படைக்கட்டுப்பாடும் தமிழர் மதிப்பைப் பெற்றதுடன், உரோமர்களுடன் இன்னும் நன்கு பழகி அவர்கள் நாகரிகத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற அவாவையும் தூண்டாதிருந்திருக்க முடியாது.

இந்நிலையில் உரோமருடன் அரசியல் தொடர்பு கொள்வ திலுள்ள நலங்களை முதல் முதல் கண்டுணர்ந்தவன் ஒரு பாண்டிய அரசனேயாவான். உரோமர் நேசநாட்டினனாகும் எண்ணத்துடன் அவன் அகஸ்டஸ் ஸீஸரிடம் இரண்டு தூதுக் குழுக்கள் அனுப்பினான். அவற்றுள் ஒன்று ஜூலியஸ் ஸீஸர் மாண்ட 18-ஆம் ஆண்டில் (கி.மு. 26-இல்) அகஸ்டஸ்