பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 26

பேரரசன் செல்வத்தை இந்தியா 55 இலக்கம் செஸ்டர்கள் (9,86,976 ஆங்கிலப் பொன்கள்) அளவில் குறையாமல் ஆண்டுதோறும் இறைத்துவந்தது என்று அவர் கூறுகிறார். இச்செல்வத்துக்கீட டாக இந்தியா அனுப்பிய சரக்குகள் தம் மூலவிலைக்கு நூறுமடங்காக விற்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.42

இக்காலத்தில் உரோமத் தங்கம் பேரளவில் தமிழகத்தில் வந்து குவிந்ததற்கான சான்றாக, அகஸ்டஸ் ஆட்சிக் காலத்திலிருந்து ஜீனோ ஆட்சிக்காலம் வரையுள்ள (கி.மு. 27 முதல் கி.பி. 491 வரையுள்ள) உரோம நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதையுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கி.பி. 226-இல் நிறுவப்பெற்றதாக நம்பப்படும் பியூட்டிங் செரியன் பட்டயங்களின்படி,43 அக்காலத்தில்கூட உரோமர்கள் தங்கள் வாணிக நலங்களைக் காப்பதற்காக முசிறியில் இரண்டு படைப்பிரிவுகளை (800 முதல் 1200 வீரர்வரை) வைத்திருந்தனர் என்றும், அதே காலத்தில் அங்கே அகஸ்டஸுக்கு ஒரு கோயிலெடுத் திருந்தனர் என்றும் அறிகிறோம்.4

கீழைநாடுகளுடன் தமிழகம் நடத்திய வாணிகம்பற்றி நமக்கு இத்தகைய விளக்கமான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தமிழ் நூல்களுள் பல குறிப்புக்கள் வணிகரும் பிறரும் சாவகத்தில் (சுமாத்ரா அல்லது ஜாவாவில்) உள்ள நாகபுரத்துக்கும், பர்மாவிலுள்ள காழகத்துக்கும், இலங்கையிலும் வங்காளத்தி லுமுள்ள கடல்துறைமுகங்களுக்கும் கடல்வழியாகச் சென்றனர் என்பதைச் சுட்டுகின்றன.

அடிக்குறிப்புகள்

1. Myos - Hermos.

2. Strabo.

3. Hippalos.

4.

Fartak.

5.

சிந்து ஆற்று முகப்பு நிலத்தின் தலைப்பிலுள்ள பாதலா: மக்கிரிண்டிலின் டாலமி:

பக்கம். 146.

6.

Favonius.