பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அப்பாத்துரையம் - 26

“மின்செய்பொலங் கோயிலிடை வியன்தவசின் மீதே அஞ்சவரு வாசுகி அமர்ந்தபதி காண்நீ!

மஞ்சுதவழ் மாடமொடு கூடம் மிடைகாடு

விஞ்சவரு பைங்கழனி யாவும்விழி கொள்வாய்!”2

கி.மு. 13-ஆம் நூற்றாண்டினருகாமையில் கங்கைக்கும் யமுனைக்குமிடையேயுள்ள பகுதியில் நாக அரசுகள் இருந்ததாக மகாபாரதத்திலிருந்து கேள்விப்படுகிறோம். திங்கள் மரபைச் சேர்ந்த ஆரியர்கள் தற்போது தில்லி இருக்குமிடத்தில் புதியதொரு துணைத்தலைநகரை அமைக்க விரும்பியபோது, அவ்விடத்தில் தங்கி வாழ்ந்த நாகர்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.

காவியத் தலைவனாகிய அருச்சுனன் தன் நாடுகடந்த வாழ்வில் முதலில் உலிபி என்ற நாக இளவரசியையும், அதன்பின் மணிபுரத்தை ஆண்ட நாகஅரசன் சித்திரவாகனன் புதல்வியாகிய சித்தராங்கதையையும் மணம்புரிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அருச்சுனன் பேரனாகிய பரிட்சத்து நாக அரசன் தட்சகனால் கொல்லப்பட்டான். இது காரணமாகப் பரிட்சித்தின் புதல்வன் சனமேசயன் நீண்டகாலம் நாகருடன் வெங்குருதிப்போர் நடாத்தி அவர்களில் ஆயிரக்கணக்கானவர்களை அழித்தான்.

மீண்டும் நாகர்களை நாம் வரலாற்றில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் காண்கிறோம். அப்போது ஒரு நாகமரபினர் மகதத்தை ஆண்டனர். இம்மரபைச் சார்ந்த ஆளும் மன்னனாகிய அஜாத சத்துருவின் ஆட்சியிலேயே கௌதம புத்தர் தம் புதிய கோட்பாட்டைவகுத்துரைத்தார்.அது நாகர்களின் பேராதரவைப்

பெற்றது.3

இலங்கை வரலாற்று நூல்கள் யாவுமே நாகர்களைப் பற்றிய செய்திகளுடன் தொடங்குகின்றன. இவற்றிலிருந்து கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் தீவின் மேற்குக் கரையில் வல்லமைவாய்ந்த நாக அரசுகள் நிலவினவென்றும், அக்காரணத்தால் தீவு நாகத்தீவு என்று அழைக்கப்பட்டதென்றும் அறிகிறோம். நாகர் தலைநகர் கல்யாணி என்பது.கல்யாணியை ஆண்ட அரசன் மருகி கணவத்த மானோ மலையை ஆண்ட ஒரு நாக அரசனுக்கு மணம் செய்து கொடுக்கப் பட்டாள். இது கல்யாணிக்கு நேர் எதிராக இந்தியக்