பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72) || _ _.

அப்பாத்துரையம் - 26

அவர்கள் எப்போதும் பாசப்படையுடையவர்களாகத் தீம்பு செய்வதிலே மகிழ்ந்திருந்தனர்.

இரண்டு நாகர்களிடையே நடைபெற்ற பூசலை மற்றொரு தமிழ்க் கவிஞர் இவ்வாறு வருணித்துள்ளார்:

66

"கீழுலகத்திலே, நாகநாட்டை ஆண்ட ஆண்ட இரு அரசர்கள் புத்த பீடிகையைப்பெறப் போட்டியிட்டனர். இருவருள் எவரும் அதை நிலத்திலிருந்து பெயர்க்க முடியவில்லை. ஆயினும் முயற்சியைக் கைவிடஇருவரும் விரும்பவில்லை.கனல் தெறிக்கும் கண்களுடனும். சீறி எழும் மூச்சுடனும் இருவரும் தத்தம் பெரும் படைகளை நடத்தி வெங்குருதிப் போராற்றினர். அறிவு முதல்வர் (புத்தர்) இருவர் முன்னிலையிலும் தோன்றினார். 'உங்கள் சச்சரவை நிறுத்துங்கள்; பீடிகை எனது' என்று கூறி அவர் அதில் அமர்ந்து, அறமுரைத்தார்.’

997

இதே கவிஞர் இப் பீடிகை இருந்த மணிபல்லவம் என்ற தீவு காவிரிப்பூம்பட்டினத்துக்குத் தெற்கே 30 யோசனை தொலைவில் இருந்தது என்று குறிக்கிறார்8. அத்துடன், வடஇந்தியாவில் காந்தார நாட்டில் ஒரு நகரம் நில அதிர்ச்சி காரணமாக நிலத்தில் 400 யோசனை தொலை ஆழ்ந்துசென்று நாகநாட்டை அடைந்த தாகவும் குறிப்பிடுகிறார்?

இக் கூற்றுக்களால் பண்டை நாகர்களைப்பற்றியும் அவர்கள் நாட்டைப்பற்றியும் அக்காலத் தமிழ்க் கவிஞர்களுக்குத் தெளிவற்ற குளறுபடியான பல கருத்துக்கள் இருந்து வந்தன என்பது தெளிவு. உண்மையிலேயே நாகர்கள் நிலப்பரப்புக்கு நெடுந்தொலை கீழேயுள்ள பாதலத்தில் வாழந்திருந்னர் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், தம் காலத்திலிருந்த நாக குலத்தவர்களைப் பற்றியும் நாக்குல அரசுகளைப்புற்றியும் அவர்கள் கிட்டத்தட்ட நம்பகம் வாய்ந்த விவரங்களே தந்துள்ளனர்.

சோழ அரசன் கிள்ளிவளவன் நாக இளவரசியை முதன் முதலில் காணூம் காட்சி கீழ்வருமாறு விரித்துரைக்கப்படுகிறது!0

"இன்பகரமான இளவேனிற் பருவத்தில் ஒருநாள் ஒளிவிடும் மணிகள் பதித்த நீண்ட முடியணிந்த கிள்ளி ஒரு பசுமரக்காவின் நிழலில் தங்கியிருந்தான். அங்கே மணங்கமழும் பூங்கொடிக