பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் - 26

சோழ அரசன் கிள்ளிவளவன் சிறிதளவு காலத்துக்காவது அயல் அரசனாகிய ஒரு நாகன் மகளை மணந்திருந்தான் என்பது ஒரு வரலாற்றுச் செய்தியாகவே காணப்படுகிறது. ஆனால் கிள்ளி வளவன் காலத்திலேயே இருந்தவரான மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் ஒரு கவிஞனின் கற்பனை உரிமையுடன் அத்திருமணம்பற்றி ஆர்வப்புனைவியலான ஒரு சித்திரம் தீட்டி யிருக்கவேண்டும். தமிழ் மன்னனொருவன் ஒரு நாகநங்கையை மணந்தானென்பது தகாச்செயலென்று அவர் கருதியிருக்க வேண்டும்.

நாகர்களில் எயினர், ஒளியர், அருவாளர், பரதவர் ஆகிய பல கிளையினர் இருந்தனர். இவர்களில் மறவரே மிக வல்லமை வாய்ந்தவராகவும் போர்த்திறமிக்கவராகவும் இருந்தனர். தமிழருக்குப் பெரும் பகைவராய் விளங்கியவர்களும் இவர்களே. இவர்களைப் பற்றி ஒரு கவிஞர் கூறுவதாவது:

“அவர்கள் திண்ணிய உடலும் ஆற்றல்மிக்க உறுப்பமைதி களும் உடையவர்கள். புலிபோன்ற அச்சந்தரும் காட்சியுடை யவர்கள். அவர்கள் தலைமயிர் நீண்டு சுருண்டு அடர்த்தியா யிருந்தது. தோல் பொதிந் தியற்றப்பட்ட விற்கள் தாங்கிக் குருதிவெறி கொண்டவர்களாய், எந்தச் சமயத்திலும் பிறரைத் தாக்கத் தயங்காதவர்கள் அவர்கள். துணையற்ற ஏழை வழிபோக்கர் மீது அவர்கள் தம் அம்புகளைச் செலுத்துவர். அவர்களைக் கொள்ளையிடுவதால், கிடைக்கப்போவது ஒன்றுமிருக்க முடியாது என்று தெரிந்த சமயத்தி ம், அம்புத் தாக்குண்டவர்களின் உடல் துடிப்பைக் காணும் கொடிய அவாவால் அவர்களைத் தாக்கும் பண்புடைவர்கள் அவர்கள்!”

அவர்கள் தொகை மிகப் பெரிதாயிருந்தது. சிறப்பாக, கீழ்கடற்கரையில், காவிரி, வைகையாறுகளுக்கிடையே, இன்றி ருப்பதுபோலவே அன்றும் அவர்கள் பெருந்திருளாயிருந்தனர். ஆகவே தமிழரசர்களின் படைகளை அவர்கள் வெற்றிகரமாக எதிர்த்து நின்றனர்.

மேற்குறிப்பிட்ட கவிஞர் மேலும் கூறுவதாவது:

66

"அவர்கள்

கனன்றெழும் வெஞ்சினத் தோற்றம் உடையவர்கள். திருகிச் சுருண்ட அவர்கள் தாடிகள் கலைமான்