பக்கம்:அப்பாத்துரையம் 26.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

75

கொம்புகள் போன்றவை. அவர்கள் வில்லின் நாணொலியும் அவர்கள் இருதலை முரசின் முழக்கமும் பெரும் படைகளின் துணையுடைய மன்னரையும் மருண்டோடச் செய்யும்.”2

போரில் அவர்கள் அஞ்சாத் தீரத்தைத் தமிழரசர் மிக உயர்வாக மதித்து, தமிழ்ப்படைகளில் அவர்களையே பெருந் தொகையினராகச் சேர்த்துக்கொண்டனர். நாலை கிழவன் நாகன் என்ற மறவர்கோமான் பாண்டிய அரசனிடம் அமைச்சனாகவும், அவன் படைகளின் தலைவனாகவும் பணியாற்றினான்3.குதிரை மலையை யாண்ட பிட்டங்கொற்றன் என்ற மற்றொரு தலைவன் சேர அரசனிடம் பணிசெய்தான்!

து

14

நாக மரபினரிடையே முற்றிலும் அடங்காப் பண்புடைய வர்கள் எயினர் அல்லது வேடரே.நிரைகோடலும், கொள்ளையும் கொலையுமே, அவர்கள் வாழ்க்கையில் மேற்கொண்ட ஒரே தொழிலாயிருந்தது. அவர்கள் அச்சந்தரும் காளியை வணங்கினர். தம் கொள்ளையில் அத்தெய்வத்தின் துணையைப் பெற அவர்கள் அத்தெய்வத்தின் கோயில்களில் எருமைகளைப் பலியிட்டனர்'5. சூறையாட்டுக்குப் புறப்படுமுன், அவர்கள் புட்குறிகளும் பறவை ஒலிக்குறிகளும் எதிர்ப்புகளும் பற்றிய அறிவுரை கேட்டனர்.16

அவர்கள் மரபினர் இன்றும் அவர்கள் பண்புக்கேற்ற படி கள்ளர் அல்லது 'கள்வர்' என்ற பெயருடன் குறிக்கப்படுகின்றனர். 12-ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசர் சடிலவர்மனுக்குரிய செப்புப் பட்டயங்களில் குறிக்கப்பட்ட தீர தரன்-மூர்த்தி எயினர் இம்மரபினர் என்று தெரிகிறது."

நாகரின் இன்னொரு மரபினர் ஒளியர். இவர்கள் கரிகால் சோழனால் வென்றடக்கப்பட்டனர் என்று தெரிகிறது8.மாமல்ல புரத்திலுள்ள ஒரு கல்வெட்டின் மூலம் அவர்கள் கி.பி. 11-ஆம் நூற்றாண்டுவரை கூட வலிமையுடனிருந்தனர் என்று அறிகிறோம்.!9 1040 முதல் 1069 வரை ஆண்ட மேலைச்சாளூக்கிய அரசன் ஆகவமல்லனை (கொப்பத்தில் நடைபெற்ற போரில்) முறியடித்த சோழ அரசன் கோப்பரகேசரிவர்மன் என்ற உடையார் ஸ்ரீஇராசேந்திர தேவரின் ஆட்சியாண்டு 9-இல் இது வெளியிடப் பட்டது.மாமல்ல புரத்திலுள்ள வராகசுவாமி கோயிலுக்கு அளிக்கப்பட்ட ஒரு மனையின் மானியப் பத்திரமாக அது