பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் - 27

கண்டாலும் இருபது பேருடனும் ஒப்புரவு காட்டி நட்பாவதே என் வழக்கம். ஆனால், இத்தகைய இடங்களில் உள்ளூர என் ஆர்வம் பதிவதில்லை. தங்களையோ இடைவிடாது தொடர்ச்சியாக நான் மனமார நட்பாடியுள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும்.வேறு எவரினும் தங்களிடம் மிகுதி நட்புரிமை கொண்டுள்ளேன் எனத் தங்களிடம் அடிக்கடி கூறியுள்ளேன். அது வகையில் உலக முழுமைக்கும் உறுதிகாட்டவே நான் விரும்புகிறேன். நான் எங்கேனும் உண்மையில் பற்றுதல் வைத்திருத்தால் (பற்றுடையேன் என்பதையே பலர் மறுக்கக்கூடும்) அது கட்டாயம் என் தாயிடம் தான்.தாங்களோ அவள் வழியில் எனக்கு மிக நெருங்கிய உறவினர். உங்களுக்கு நான் எத்தனை செய்தாலும் அவளுக்கு நான் பட்ட கடனையும் நன்றியையும் முழுதும் தெரிவிக்க அது போதாத தாகவே இருக்கும். இவ் வெல்லாக் காரணங்களையும் எண்ணிப் பார்த்து என் உள்ளம் நிலைத்து உறுதிப்பட்டுவிட்ட இவ்வொரு செயலில் - உங்கள் செல்வ நிலையை எளிதாக்குவதில் - என் கோரிக்கையை மறுக்க மாட்டீர்கள் என்று நட்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள்,