ஹோரேஸ் வால்போல் கடிதங்கள்
83
கடிதம் - 28
நாட்டு வரலாறும் மனித வரலாறும்
(ஹோரேஸ் மானுக்கு)
ஆர்லிங்டன் தெரு, ஜூலை 22, 1744
அன்பரே, சிலகாலமாகத் தமக்கு ஒன்றும் எழுதாததன் காரணம், எழுத எதுவும் இல்லாததுதான். நம் நட்பிடையே அதை விளக்கவேண்டிய தேவையில்லை. ஆனால், நட்புணர்ச்சியைப் புதுப்பிக்கவே இதுவும் எழுதுகிறேன். அத்துடன் கடிதம் எழுதும் கடமையாவது எழுதுவதற்கான செய்திகளைத் தூண்டி என் இயற்கைச் சோம்பலைக் குறைக்க உதவுமென்று எண்ணுகிறேன். கடிதப் போக்குவரத்துக்குத் தங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளர் கிடைத்திருப்பது என் நற்பேறு. நெடுநாள் நேரில் காணாதவிடத்து; தனி நண்பருக்குரிய தொடர்புகள் குறைந்து விடுகின்றன. கடிதங்களுக்கு உயிர்நிலையான இச்சிறு செய்திகள் நண்பர்களிடையே வாழ்க்கை வரலாறுகளாய் விடுகின்றன. ஹோரேஸ் மான், ஹோரேஸ் வால்போல் வரலாறுகள் இத்துறையில் ‘குவிக்போர்டின்’, ‘கிளாரெண்டன்' வரலாறு களுக்கு இணையாகின்றன.
வரலாறு என்றவுடன் எனக்கு நாட்டு வரலாறு நினைவுக்கு வருகிறது. அவ்வகையில் 'மொக்காலனி' போன்றவர்கள் இன்று உயிருடனிருந்தார்களில்லையே என்று எண்ணாதிருக்க முடிய வில்லை. ஏனெனில், வரலாறும் கலையும் இன்றுபோல் ஒன்றுக்கு முதவாதார் கையில் என்றுமிருந்ததில்லை. நம் லண்டன் நகரம் நீண்டநாள் அரசியலை அடக்கியாண்டு பழகிய பழக்கத்தால் இப்போது இலக்கியத்தையும் வரலாற்றையும் கூட அடக்கியாள முற்பட்டுவிட்டது. அவர்கள் கார்ட் என்ற ஒரு கோயில் பிரசார கனிடம் ஆண்டுக்கு 50 பொன் விழுக்காடாக ஏழாண்டுக்குப்