பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

அப்பாத்துரையம் - 27

பணம் தருவதாகப் பேசி இங்கிலாந்து வரலாறு எழுதுவிக்க முனைந்துள்ளனர். நகர் முதுமக்கள் நால்வரும் நகர உறுப்பினர் அறுவரும் நூலாதாரங்களையும் நூல் போக்கையும் மேற்பார்வையிட அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுவில் சாக்கடை மேற்பார்வையாளராயிருப்பவர்களே இங்ஙனம் இலக்கிய அறிவியல் மேற்பார்வையாளராகவும் அமர்த்தப்பெற்றனர்! உண்மையில் சேரிகள் பற்றிய அறிக்கையும் இங்கிலாந்தின் வரலாறும் ஒரு தன்மையுடையவை என்றே அவர்கள் எண்ணி விட்டனர் போலும்! இனி நூல்கள் பல்கலைக் கழகங்களின் பெயர் பொறித்து வெளியிட வேண்டுவதில்லை. கோயில் மதில்களுக்கு கோயில் வேலையாட்களே 'ஜேம்ஸ் ஸ்மித் - தாமஸ் ஜான்ஸன் குழுவினர்’ என்ற பெயர் பொறித்து நூல்களையும் ‘கறுப்பு' அடித்து வெளியிட்டுவிடலாம்.

'வெள்ளையடிப்பவர்'களாகிய

தற்போது ஐரோப்பாவெங்கும் பெருஞ்செயல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் 'கேட்டோவின் முடிவும் ரோம் நகர் வாழ்வுமாய்' இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் பற்றி நான் ஒன்றும் எழுதக்காணோமே என்று வரலாற்றாசிரியத் தோழராகிய நீங்கள் வியப்படைந்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் எனக்கு இங்கே ஒன்றும் தெரியவில்லை. ரைன் பகுதியில் சார்ல்ஸ் இளவரசர் முன்னேறும் முன்னேற்றத்தால் எதுவும் சாய்ந்து விடவில்லை. நேர்மாறாகப் பிஃரஞ்சுப் படைகளும் ஃபிளாண்டர்ஸிலிருந்து முன்னேறியே வருகின்றன. மேலும் இப்போது கவுண்ட்டி ஸாக்ஸின் படைகள் குறைந்தும் நம்மவை கூடியும் இருசார்பும் ஒத்திருப்பதனால் நம் படைகள் ஷெல்ட் ஆற்றைக் கடந்து அப்படைகளை எதிர்நோக்கிச் செல்கின்றன என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் என் நாட்டு அரசியலில் நான் இன்னும் போட்டியற்ற ஆட்சிதான் புரிகிறேன். என் ஆட்சி மீது வேறு படையெடுப்பு எதுவும் இல்லாததனால் நான் என் வீட்டைப் பிறரிடம் ஒப்படைத்து விட்டு, என் வீட்டுப் பழம்பொருள்கள், குடும்பத் தெய்வங்கள், குடிபடைகள் எல்லாவற்றுடனும் புறப்பட்டு ஐந்தாறு வாரம் சைபீரியா சென்று தங்க முற் பட்டுள்ளேன்.என் தந்தையின் நண்பர் சர்லண்டுக் கோமகனார் ஏற்கெனவே அங்கு இருந்துவருகிறார்.