இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஹோரேஸ் வால்போல் கடிதங்கள்
87
மரபறியாத ஸ்பானியக் கோமகனாருள் ஒருவர் அவளிடம் “லிங்கன் பெருமகனார் செல்வி பெல்ஹாமிற்குத் தாம் நல்ல கணவனாயிருக்கப் போவதாக உறுதி கூறியுள்ளார்" என்றார். அவள் உடனே சட்டெனத் திருப்பித் தன் பார்வையால் அவரைச் சுட்டெரித்து “அறிவேன் நான், அவர் உறுதியின் உறுதியை” என்றாள். அவளைப்பற்றிய வேடிக்கைப் பாடல் இதோ!
படத்தில் கண்ட விருந்தினை
விருந்தினுக் குரியவர் உண்ணமாட்டார்
அவள் அழகும் அதை அறிந்தோர்க்கு உதவாது
நொண்டியும் கிழமும் கண்டு மகிழும்மே.
இத்துடன் விடைபெற்றுக் கொள்கிறேன். இதோ சில விருந்தினர்கள் வருகின்றனர். மன்னிக்கக் கோருகிறேன்.
தங்கள்,