பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஹோரேஸ் வால்போல் கடிதங்கள்

91

எண்ணுகிறேன். அத்துடன் இச் செய்தியைக் கொண்டுவருவது ஒரு யூதன்; ரைன் பகுதி நுழைவுபற்றிய முதல் செய்தி கொணர்பவனும் அவனே.

நண்பரே, இச் செய்திகள் எவையாலும் நான் எங்ஙனம் ஆறுதல் பெறமுடியும், ஃபிளாரென்ஸில் அமைதி நிலவித் தம்மைப்பற்றி நான் கவலைப்படும் நிலையிருக்கும் வரையும்? எழுதும் இந்த மைக்கோல்கூட அவ்வெண்ணத்தால் நடுக் குறுகிறது!

நம் பழைய மங்கையர் ஸாரா மார்ல்பரோ, கிரென்லில் கோமாட்டி ஆகிய இருவரும் நேற்று மாலை புறப்பட்டு விட்டனர். ஸாராவுக்காக முன் கூட்டி எழுதப்பட்டுள்ள மணப்பாமாலை இனி வெட்டிச் சீர்திருத்தப்பட வேண்டும். ஏனெனில், மாமியார் இப்போது கோமாட்டியாய்க் குடும்பம் உயர்வு பெற்றுவிட்டது. இப்புதிய பட்டம் பாடலெங்கும் மிளிரவைக்க வேண்டும்.... கிழவன் மார்ல்பரோவின் இறுதிப் பத்திரத்தைப் பற்றித் தெரிந்தவுடன் எழுதுகிறேன்.

வால்போல் பெருமகனார் இளைஞர் கார்டினருக்கு ஒரு கடிதம் எழுதுவதாகக் கூறியுள்ளார்...

கப்பல் தளபதி மாத்யூஸை நான் இன்னும் பார்க்கவில்லை. அவர் மிகவும் பைத்தியமாகவே காணப்படுகிறார். முந்நிறச் சூட்டுடன் அவர் பூங்காவில் காணப்பெற்றாராம். இது எதற்காக என்று

கேட்டபோது "ஓ ஓர்ம்ஸ் உடன்படிக்கை! ஒர்ம்ஸ் உடன் படிக்கை' என்று கத்தினாராம்!...

போஷாம்ப் பெருமகனார் மறைவு அவர் பெற்றோர்களுக்குத் தாங்கொணாத் துயரம். ஆனால், ஸாமர்ஸெட் பெருமக்களின் செருக்கிற்கு இது ஒரு நல்ல படிப்பினையேயாகும். இப்போது தான் அவர் அப்பாவி ஹெர்ட்ஃபோர்டுப் பெருமகனுக்கு எழுதியுள்ளார். இப் பேரிடி தான் செய்த கொடுமைகளுக்கான தெய்வத் தண்டனையே யென்றும் தன் பிள்ளையின் மறைவுக்கு ஒரு வகையில் தானே காரணமென்றும்! பாவம், ஹெர்ட்ஃபோர்டு நல்ல மனிதன்; இக் கிழட்டுக் கொடுங்கோலனால் அவர் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமன்று. இத்துடன் ஸாமர்ஸட் பதவியும் ஸர் எட்வர்ட் ஸெய்மூருக்குச் செல்லும். அப் பதவி ஏற்பட்டதுமுதல்