92
அப்பாத்துரையம் - 27
மிக அநீதமாக அது அவர் குடியிலிருந்து பிரித்துவைக்கப்பட்டு வந்துள்ளது. முதல் பதவியாளர் அப் பதவியைப் பெறாது ஹெர்ட்ஃபோர்டாகவே இருக்கும்போது ஒரு பெருங்குடிச் செல்வியை மணந்து ஒரு பிள்ளையைப் பெற்றார். பிள்ளையின் 20-ஆவது வயதில் தாய் இறந்தாள். அப் பிள்ளையே போஷாம்ப் பெருமகன் தந்தை. அதன்பின் அவர் ஆன் ஸ்டான்ஹோப் என்ற அழகியைக் காதலித்து மணந்தபோது தன் ஸாமர்ஸட் பதவியை போஷாம்பிடமிருந்து பிரித்துவிட ஏற்பாடு செய்துவிட்டார்.ஸர் எட்வர்ட் செய்மூர் இந்த போஷாம்ப் மரபில் வந்தவர். மன்னர். வில்லியம் (மூன்றாமவர்) இங்கிலாந்தில் வந்திறங்கிய போது ஸர் எட்வர்டை நோக்கி "ஸர் எட்வர்டு, தாம் ஸாமர்ஸெட் பெருமகன் குடியினர் அல்லவா?” என்றாராம் ஸர் எட்வர்டு, 'இல்லை அரசே; ஆனால், அவர் என் குடியினர்தான் என்றாராம்!
66
""
லிங்கன் பெருமகனார் சென்ற செவ்வாயன்று மணம் புரிந்து கொண்டார். மிடில்ஸெக்ஸும் மணக்க இருக்கிறார்.ஃபிரெஞ்சு மன்னர் மாதாம் டிஷாட்டொரொவை மெல்ல நீக்கி வைத்த செய்தி உங்களுக்குத் தெரியுமா? இதில் ஸாய்ஸான் தலைமகன் (Bishop) நடந்து கொண்ட முறை மிகவும் கேவலமானது. அனைவர் முன்னிலையிலும் அவளிடம் “மன்னர் உங்களுடன் கொண்டிருந்த மறைந்த உறவு பொது அறிவாய்விட்டபடியால் அவர் மன மாற்றமும் இப்போது வெளிப்படையாக அறிவிக்கப் படுகிறது. இனி தமக்கு அரசவையில் நுழைவுரிமை கிடையாது. என்று கூறி மீண்டும் அரசரை நோக்கி,” தங்கள் விருப்பம் இது தானே அரசே” என்று முகதலிக்க, அவரும் வெட்கம் விடுத்து, 'ஆம்' என்றார். இது மட்டுமோ? அவளுக்குத் தரப்பட்ட உரிமைச் சம்பளம் நிறுத்தப்பட்டது. அவள் பரிந்துரைத்து அமர்த்தப்பட்ட ஏவலர், அரண்மனை அலக்குக் காரர் கூட நீக்கப்பட்டு விட்டனர்! இத்தனை அவக்கேட்டுக்கும் முத்தாய்ப்பாகச் சூதுவாதற்ற அரசி மாறுபாட்டைப் பொறுத்திருந்து ஏற்கத் தாங்காது அரசன் உயிரையும் உடலையும் ஆட்கொள்ளும்படி நகருக்குள் வெற்றி கரமாகப் புகுந்து அரண்மனை சேர்ந்தாள்!
இங்கே நான் கேள்விப்பட்ட ஸ்காட்லாந்து வீரனொரு வனின் கடமை யுணர்ச்சியும் எளிமையும் எனக்குக் கவர்ச்சியும் நகைச்சுவையும் ஊட்டின. அதையும் இவ்வுயர் உலகச்