பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதிப்பும் தகுதியும்

கடிதம் - 1

என் அருமைச் சிறுவ.

ஜூலை 24, 1739.

அண்மையில் நான் உன்னுடன் வந்திருந்தபோது கடிதம் எழுதும் பழக்கத்தை நான் ஏன் விட்டுவிட்டேன் என்று நீ கேட்டா யல்லவா? அக்கேள்வி உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி யையே கொடுத்தது. என் கடிதங்கள் உன் விருப்பத்துக்கு உகந்தவையாயிருந்தன என்பதையும் அவற்றை நீ பொருட்படுத்தி வாசித்தாய் என்பதையும் அது காட்டுகிறது. அப்படியானால் நான் இனி அடிக்கடி கடிதம் எழுதுவது உறுதி.

நீ உன்னிப்பாகவும் விருப்பத்துடனும் வாசிப்பதானால், என் கடிதங்கள் உனக்கு மிகவும் பயனுடையவையாய் இருக்கும் என்பது உண்மை. ஆனால், நீ அங்ஙனம் படிக்காவிட்டால், அக் கடிதங்கள் என் உழைப்பையும், நேரத்தையும் வீணாக்க மட்டுமே உதவும். அதோடு நீ உன்னிப்பாய்ப் படிக்காவிட்டால், படித்த செய்திகள் உன் மனத்தில் நிலையாய்த் தங்கமாட்டா. நான் அவற்றின்மூலம் கருதும் பயனுமில்லாமல் போய்விடும்.

கவனமாக நீ படிக்காவிட்டால் படிக்காதிருப்பதே நல்லது; நீ படிக்காதிருப்பின் நான் முயற்சி எடுத்து எழுதாதிருப்பது நல்ல தல்லவா? கடிதங்கள் புத்தகங்களைப்போல மீண்டும் மீண்டும் படிக்கத் தக்கவையல்ல. ஆனால், அக் காரணத்தினாலேயே அவை நன்கு மனத்திலிருத்திப் படிக்கவேண்டுபவை யாகும். ஏனெனில், அவற்றை ஒருமுறை படித்து என்றென்றைக்கும் பயன்படுமளவு நினைவில் பதிக்கவேண்டும்.

படிப்பு, விளையாட்டு ஆகிய உனது மற்ற வேலைகளுக் குரிய நேரத்தில் நீ அவற்றை வாசிக்கவோ, அவற்றுக்கு விடை