பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்

99

எழுத முனையவோ கூடாது. ஏனெனில், நீ படிக்கும்போது விளை யாட்டைப் பற்றியோ விளையாடும்போது படிப்பைப் பற்றியோ நினைக்கக் கூடாதல்லவா? அதுபோலக் கடிதம் வாசிக்கும் போதும், எழுதும்போதும், நீ வேறு எதுவும் செய்யக்கூடாது.

நீ கவனமில்லாது செய்யும் எந்த வேலையிலும் உன் நேரம் இரு மடங்கு வீண்செலவாகும். ஏனெனில், அப்போது செய்த வேலையை மீண்டும் நீ செய்தாக வேண்டும். முதல் தடவை செய்ததைவிட மிகுதியான முயற்சியில்லாமல் இரண்டாம் தடவை ஒரு காரியத்தைச் செய்ய முடியாது.

வாழ்க்கையின் முதன்மையான செய்திகளுள் மதிப்பு என்பது ஒன்று. தக்க செயலைத் தக்க இடத்தில் செய்வதன் மூலமே. அம்மதிப்பு ஏற்படும். பல செய்திகள் ஒரு இடத்திலும் ஒரு சமயத்திலும் தகுதியுடையவையாய் இருக்கும். ஆனால், வேறோரிடத்தில் அதுவே தகுதி யிழந்து மதிப்பற்றதாகிவிடும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் விளையாடுவது தகுதியுடையதாகவே எண்ணப்படும். ஆனால், கண்டகண்ட இடத்திலும் காலத்திலும் பட்டம்பறக்கவிட்டுக்கொண்டிருப்பதோ, அல்லது திரு. மெய்ட்லண்ட் (ஆசிரியர்) முன்னிலையில் ‘நாயும் புலியும்' ஆடுவதோ தகுதியுடையதாக மாட்டாது.

பாடுவதும்,ஆடுவதும் கேளிக்கைக் கூட்டங்களில் பொருத்த மானதே.ஆனால், வழிபாட்டிடத்திலோ பிரிவுக் கொண்டாட்டத் திலோ பாடியாடுபவன் பித்தனாகவே கொள்ளப்படுவான்.

தகுதியும் மதிப்பும் அறியாதவன் உலகத்தால் மதிக்கப்பட மாட்டான். உன்னளவில் அவையில்லாமல் திரு. மெய்ட்லண்ட் உன்னை மதிக்க மாட்டார் என்பது உறுதி. அவர் மதிக்காமல் நான் உன்னை மதிக்கப் போவதில்லை. எம் இருவர் மதிப்புமே உனக்கு உலக மதிப்புக்கு வழிகாட்டும். ஆகவே, எல்லாச் செய்திகளிலும் அவர் கூறியவற்றைக் கருத்துடன் கேட்டு மனமார ஆராய்ந்து அதன்படி நடப்பாயாக.

உன் அன்புள்ள தந்தை,