பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

அப்பாத்துரையம் - 27

செய்யுள் நடையின் பயன்

கடிதம் - 2

பாத், அக்டோபர் 26, 1739.

செய்யுள் நடையும் மேடைச் சொற்பொழிவு நடையும் பலவகையில் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையே. ஆயினும், இரண்டும் ஒரே வகை அணிகளையே பெரும்பாலும் கையாள் கின்றன. இரண்டிலும் உருவகங்கள், உவமைகள், தொடர் உருவகங்கள் (உருவகக் கதைகள்) ஆகியவை மலிந்துள்ளன. ஆகவே, மொழியின் தூய வடிவத்தையும் சரி, பெருஞ் சொல்லாளர்களின் அணிநயங்களையும் சரி, உரைநடையில் கற்பதிலும் எளிதாகச் செய்யுள் நடையில் கற்கலாகும்.

செய்யுளின் மொழிநடைப் போக்கு உரைநடையைவிட வீறுடையதாகவும் மேம்பட்டதாகவும் அமைந்துள்ளது. அதோடு உரைநடையில் ஏற்கப்படாத பல உரிமைகள் அதற்கு உண்டு. இவற்றையே செய்யுள் வழக்கு, செய்யுள் வழுவமைதி என வழங்கு கிறோம்.

செய்யுளையும் உரைநடையையும் நீ உன்னிப்பாகப் படித்தால் இரண்டின் வேறுபாடுகளையும் நீ எளிதில் காணலாம். செய்யுளில் எதுவும் நேரடியாகவும் எளிய தோற்றத்துடனும் கூறப்பவடுவதில்லை. உரைநடையிலேயே அங்ஙனம் கூறப் படுவதுண்டு. செய்யுள் அவ்வுரையை விரிவுபடுத்திப் பல நயங்களுடன் அணி செய்கின்றது.

எடுத்துக்காட்டாக ஊர் காவலன் ஒருவன் வாய்மொழியில் காலை நேரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'என்ன மூடாக்கான காலைப்போது' என்று கூறலாம். இது அப்படியே கூறப்பட்டால் முற்றிலும் உரைநடையேயாகும். இதனையே (இலத்தீன் மொழியின்) நாடகமாகிய 'கேட்டோ (Cato)வில்.