(112
அப்பாத்துரையம் - 27
ஒருவன்
காரணத்தினாலேதான் வாழ்க்கையில் மிக உயர்வடைந்த பின்கூடப் பலரிடம் குறிப்பிடத்தக்க நடைக் கோட்டம், சொற்சோர்வு முதலிய ஒளிவு நெளிவுகள், நகையாடற்குரிய பழக்கங்கள் ஆகியவை காணப்படுகின்றன. உயர்வடைந்தபின் இவை மக்களால் புறக்கணிக்கப்படலாம்; ஆனால், உயர்வடைய விரும்புபவர்கட்கும் மக்கள் நேசத்தை அவாவுபவர்கட்கும் இவை தடைகளேயாகும். பலர் இத்தகைய நடைநெறிவுகளாலும் குறைகளாலும் நகைப்புக்கும் இழிப்புக்கும் ஆளாகின்றனர்.
மேற்குறிப்பிட்ட கோட்டங்கள் உன்னிடம் இல்லாமலிருக்க வேண்டுமானால் நீ நல்லோருடன் பழகுவதுடன் அவர்கள் நடை உடை தோற்றங்களை நன்கு கவனித்துப் பழகவேண்டும். நல்லோர் பழக்கம் பற்றிய கவலை உனக்கு ஏற்பட வேண்டாம்; அப் பழக்கத்தை உண்டுபண்ணுவது என் பொறுப்பு. ஆனால், அவர்கள் இயல்புகளை ஆராய்ந்துணர்ந்து அவற்றைப் பழக்கத்தில் கொண்டு வரும் பொறுப்பு உன்னுடையது. இவ் வகையில் இடையறா விழிப்புணர்வு வேண்டியதாகும். வாழ்க்கையில் எல்லாத் துறை களுக்குமே ஓரளவு இப்பண்பு வேண்டியதல்லவா?
போதிய விழிப்புணர்வின்மையாலும் தன் மறுப்பினாலும் பலர் தம் மதிப்பைக் கெடுக்கும் சிறு தவறுதல்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள் வாயிற்படியில் கால் தட்டி இடறுவர்; குடை முதலிய பொருள்களைப் பொது அவையில் தடாலென நழுவி விழச் செய்வர். தம் இடமறியாது அமர்வர். குடிநீர்க் கிண்ணம், உண்டித்தட்டு ஆகியவற்றைச் சட்டென எடுப்பர்; திடுமெனவைப்பர்; விரைந்துண்ணுவர். வெப்பமிக்க நீரை எடுத்தும் குடித்தும் இடர்ப்படுவர். பொதுவாக எச்செயலினும் உல குடனொப்புரவு பேணாது தனிநிலை நின்று பலர் கவனத்துக்கும் கண்டனத்துக்கும், நாளடைவில் மதிப்புக் குறைவுக்கும் ஆளாவர்.
சிலர் எப்போதும் தும்மல், இருமல் ஆகியவற்றுக்கு ஆளாவர். சிலர் பெரு விரல்களை ஆட்டியும், பிற பொருள்களை ருட்டியும், கையைக் கடித்தும், துணிமணிகளைக் கடித்தும் அருவருப்புக்கு ஆளாவார்கள். இன்னும் சிலர் கையை என் செய்வது, எங்கே வைப்பது என்றறியாமல் இங்கும் அங்கும் பரந்து பொருளற்ற செயல் செய்யவிடுவர். சிலர் இன்னதைத்தான்