பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

அப்பாத்துரையம் - 27

கடிதம் - 8

பிறர்க்கென வாழ்தல்

அன்புடைச் சிறுவ,

ஸ்பா, ஆகஸ்டு 6, 1741.

நீ அனுப்பித் தந்த கட்டுரைகளும் கவிதைகளும் எனக்கு மகிழ்ச்சியூட்டின. ஆனால், உன் ஆசிரியர் திரு. மேத்தோர் முன் போலன்றி இப்போது உன்னைப்பற்றிச் சிறப்பாகக் கூறுவது எனக்கு அதனினும் மிகுதியான மகிழ்ச்சியைத் தருகிறது. 'புகழை நாடுபவன் தகுதியை வளர்க்கக் கடவன் என்பது ஓர் இலத்தீனக் கவிஞர் வாக்கு. அதனை நீ பின்பற்று மளவும் புகழ் உன்னை நாடும். அதுமட்டுமன்றி உன் விருப்பங்களனைத்தையும் நான் நிறைவேற்றும் செயலாளனாகவுமிருப்பேன். நீ தகுதியை நாடாவிடில் புகழ் கிட்டாததுடன் என் ஆதரவும் உனக்குக் குறைந்துவிடும்.

நீ பாடல் எழுதத் தொடங்கியுள்ளது பற்றி மகிழ்ச்சியடை கிறேன். காணும் பொருள்கள் பற்றிச் சிந்திக்கும் வழக்கத்தை இது உன்னிடம் வளர்க்கும். பாடல்களைப் படிப்பதால் பிறர் எண்ணங்களை மட்டும் அறிகிறோம். பாடல் எழுதுவதனால் நாமே எண்ணத் தொடங்குகிறோம். ஆகவே, இவ்வாறு உன் எண்ணங்களை நானறியும்படி எழுதியனுப்பு.

‘லூகன்” என்ற இலத்தீன் நூலில் ‘கேட்டோ'வைப் பற்றிய ஒரு செய்தி கூறப்படுகிறது. கேட்டோ தான் தனக்கெனப் பிறந்ததாக எண்ணாமல் மனித வகுப்பினுக்காகவே பிறந்ததாக எண்ணினானாம். உண்மையில் மனிதன் தன் நலம், தன் இன்பம் ஆகியவற்றுக்கு மட்டுமே பிறந்தானா அல்லது நான் பிறந்து வளரும் குழாத்தின் நலனுக்காகப் பிறந்தானா என்பது பற்றிய உன் கருத்துக்களை எனக்கு எழுது. இதுபற்றி ஒன்று உறுதியாகக்