பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

அப்பாத்துரையம் - 27

கடிதம் - 11

தந்தையும் மகனும் (1)

லண்டன், டிசம்பர் 2, 1746

அன்புச் சிறுவ,

திரு.பொஷெட் என் நண்பனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தற்செயலாக உன்னைப்பற்றிப் பாராட்டிப் புகழ்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் சென்ற வாரம் நோய்வாய்ப் பட்டிருந்தபோது நீ கொண்ட கவலையும் ஆதரவும் தந்தையாகிய என் உள்ளத்திற்கு உரமூட்டும் மருந்தாய் உதவின. உன் அன்புக்கு நான் நன்றி கூற வேண்டும். ஏனெனில், அன்பும் நன்றியும் இயற்கைக் கடமைகள் என்று கூறப்படினும் உலகில் எவ்வளவு அருமையாயிருக்கின்றன! நான் உன் வரையில் எடுத்துக் கொள்ளும் கவலை உன் நன்றியறிதலைப் பெற்றுள்ளதனால், அது வீண்போகாது என்று நான் எண்ணுகிறேன். உன்னிடம் எந் நிலையிலும் மாறா அன்புடைய

உன் தந்தை,