செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்
125
கடிதம் - 12
தந்தையும் மகனும் (2)
லண்டன், டிசம்பர் 9, 1746.
அன்புச் சிறுவ,
இவ்வஞ்சலிலேயே திரு. ஹார்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன். எனக்குக் கடிதம் எழுதக் கூட நேரமில்லாதது நெருக்கடியா யிருக்கிறது. ஆயினும், லாசேனில் உனக்கு இன்றிய மையாது உதவியாயிருக்கக்கூடும் வகையில் இரண்டொரு வரி எழுதாதிருக்க முடியவில்லை.
எனக்குத் தற்செயலாக நேர்ந்த விபத்தினாலாகிய காயம் சற்று ஆறிவருகிறது. அக் காயத்தைவிட அதற்குரிய காரணம் தான் கவலைக்குரியது. அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் நான்' இம்முதுமையிலும் ஓய்வொழிவின்றி வேலை செய்வதால் மூளைச்சூடு ஏற்பட்டு அடிக்கடி மயக்கமும் உணர்வின்மையும் உண்டாகிறது. அத்தகைய மயக்கமே விபத்தில் என்னை மாட்டியது. நீ மட்டும் இன்னும் ஒரு மூன்று நான்கு வயது மிகுந்தவனாயிருந்தால், ஒருவேளை என் வேலைகளைப் பகிர்ந்து எனக்குச் சற்று கைத்தாங்கலா யிருந்திருப்பாய். ஆயினும், உன் காலத்தை நீ நன்கு பயன்படுத்தினால் விரைவில் எனக்கு உதவியாயிருக்கும் முறையில் நீ பக்குவமடையலாகும். அந் நிலை எய்த, நீ தற்கால ஐரோப்பிய மொழிகளை நன்கு பேசவும் எழுதவும் கையாளவும் கற்றுக் கொள்ளவேண்டும்.
அதோடு அரசியலில் திறமையுடன் செயலாற்றப் பல நாடுகளின் சட்டதிட்ட முறைகள், அரசியலமைப்பு முறைகள், பண்பாடுகள், நிலஇயல், வரலாறு, காலப்போக்கின் வளர்ச்சிகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நீ நன்காராய்ந்தறிதல் வேண்டும். இத் தகுதிகள் எல்லாம் பெற்றால் நேரடியாக என்னையடுத்து