பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(128) ||

அப்பாத்துரையம் - 27

ஒருவரைக் கூறும்போது கீழான குடியன், கூத்தியன் என்ற பொருளிலேயே வழங்குகின்றனர் அல்லது மனம் போனபடி நடப்பவன், ஊதாரி ஆகியவர்களை அப்பெயரால் குறிக்கின்றனர். இப்போது உரையை நம்பி அங்ஙனம் வாழ்வதே இன்ப வாழ்வு என ஏமாறுபவர் பலர்.

உன் நல்வாழ்வுக்காக அறிவுரை தரும் முறையில் என் நாணத்தை விட்டு உண்மையை வெளியிடுவதானால், இந் நம்பிக்கையில் ளமையின் தொடக்கத்தில் நானே பெருந்துன்பத்துக்கு ஆளாயிருக்கிறேன். பிறரால் இன்ப வாழ்வினன் என்று கொள்ளப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில், அதில் எனக்கு இன்பம் எதுவும் தோன்றவில்லை என்பதைக்கூட நான் கவனிக்க மறந்தேன். குடிவகைகளை நான் இயல்பாக எப்போதும் வெறுத்தவன், ஆயினும், அவ் வெறுப்பை அடக்கிக் கொண்டு குடித்து அடுத்த நாள் நோய்க்கும் ஆளானேன். இவ்வளவும் உயர் குடியினன் என்று கருதப்படுவதற்குக் குடிவகை இன்றியமையாதது என நான் எண்ணினதனால்தான்.

குடிவகை போலவே சூதாட்டமும் எனக்கு என்றும் பணமுடையிருந்ததில்லை. எனவே, பணம் தட்டிப் பறிக்கும் ஆவலினால் நான் சூதாடவேண்டிய கீழ்நிலை யுடையவனா யிருக்கவுமில்லை. ஆயினும், உயர்குலத்தவர்க்கு அது அவசிய மான பண்பு என்று எண்ணியதால் விருப்பமும் பற்றுமில்லாமலே அதில் ஈடுபட்டேன். இதனால் என் வாழ்நாளில் மிகச் சிறந்த இளமைப் பகுதியில் 30 ஆண்டளவும் துன்பத்தையும் தொல்லை களையும் இடையூறுகளையும் வலிய வரவழைத்தவனானேன்.

நான் மேற்கொண்ட இப் போலி நச்சு வாழ்விற்கு அணி தரும்படி அடிக்கடி அகடவிகடப் பேச்சுக்களும் சொற்களும் சூளுரைகளும் வழங்கத் தொடங்கினேன். ஆனால், அதனால் ஏற்படும் இழுக்கத்தையும் அவமதிப்பையும் கண்டு இவ் வழக்கங் களை விரைவில் கைவிட்டு விட்டேன்.

கீழோர் உலக நடையெனப் பசப்பித் திரியும் நடையை உலக நடையென நம்பியும், அவர்கள் இன்பம் எனக் கொண்ட கோலத்தை இன்பமென நம்பியும் நான் உண்மையின்பங் களனைத்தையுமே இழந்து வந்தேனென்று கண்டேன். அதுவும் அரும் பொருளை இழந்தும், பொருளினு மரிய உடல் நலத்தைக்