இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
130
அப்பாத்துரையம் - 27
விருந்தும் குடியும் பொழுதுபோக்காகக் கொண்ட எந்த உயர் குழுவினரும் குடித்துத்தள்ளாடுபவனையும் உருள்பவனையும் விரும்பாரன்றோ? சிறு சொல்லாடி நகைமுகம் கொள்ளும் நன்மக்கள் என்றேனும் பிதற்றித் திரியும் பித்தனை விரும்பு வாரோ? இத்தகையோர் நல்ல குழுவில் இடமும் பெறார். ஆகவே உண்மை யின்பமும் நல்வாழ்வும் இன்பத்தை ஒரு கருவியாக நாடி அதன் நடுநிலை காத்தலேயன்றி வேறன்று.
இதுகாறும் இன்பம் என நான் கூறிவந்தது ஐம்பொறி இன்பத்தையே மன இன்பம் இவற்றினும் உயரியது. அது அளவு கடவாமற் காக்க வேண்டும் இயல்புகூட அற்றது; அதன் இயல்பே அளவுடன் நிற்பதாகும். நன்னெறி நிற்றல், அறச் செயல் செய்தல், கல்வியறிவு ஆகியவைகள் நிலையான இன்பங்கள், உற்றிடத்துதவும் இன்பங்கள்; இவ்வின்பங்களை எப்பாடுபட்டும் நீ வளர்த்தல் வேண்டும்.
உனதன்புள்ள,