132
அப்பாத்துரையம் - 27
உலகுக்கு நான் வெளியிட இருக்கும் என் (புதல்வனாகிய) நூலை அறிஞர் கவர்ச்சியுடன் ஏற்று அகத்தோடு புறத்தை இணைத்து ஆராய்ந்து பார்ப்பர் என்றும், அவர்களுள் தலைசிறந்த மதியுரைஞர் அது இணக்கமும், பொருத்தமும், திட்பமும், உயிர்ப்பும் உடையதெனப் போற்றுவர் என்றும் நான் நம்புகிறேன்.
நீ நடுநிலக்கடல் (Mediterranean Sea) பகுதியில் நம் நாட்டு வெற்றி பற்றித் தெரிவித்ததற்கு நன்றி. இத்தாலி நாட்டு உப்பளங்கள் பற்றிய உன் விரிவுரை உன் காட்சியறிவிற்கு நல்ல சான்றேயாகும். இனிய பண்டங்களுக்கு உப்பிடுவது அவற்றின் சுவையை அளவு டையதாக்குவதற்கே என்று நீ குறிப்பிட்டிருப்பது போற்றத்தக்கது.ஆம்! அதுபோலவே உணர்ச்சி, அறிவு, இன்பம், நகைத்திறம் ஆகியவற்றையும் மட்டுப்படுத்தி நடுநிலை காக்கும் அக உப்பு ஒன்று உண்டு - அதுதான் ஒப்புரவு. இதனைக் ‘கலை உப்பு' அல்லது 'அட்டிக்' உப்பு என்பர். (நடுநிலைப் பண்பு பேணிய அதேனியர் நாட்டின் பெயர் அட்டிக்கா என்பது). புற உப்பும் அகவுப்புமாகிய இவ்விரு உப்புக்களையும் பயன்படுத் தினால் நம் உடலும் உளமும் நிலை பேறுடையவையாகும்.
திருஹார்ட்டுக்கும் பிற நண்பர்கட்கும் என் வணக்கங்கள்.
உன் அன்புமிக்க தந்தை,