138
அப்பாத்துரையம் - 27
கடிதம் – 17
கடிதம் எழுதுதல்
ஒரு கலை
லண்டன், ஜூலை, 20. 1747.
அன்புச் சிறுவ,
இக் கடிதத்துடன் உன் தாயின் கடிதம் சேர்க்கப்பட்டி ருக்கிறது. அதனுள்ளாக என் தமக்கையார் உனக்கு ஒரு கடிதம் வைத்தனுப்பியிருக்கிறார். அவர்கள் தம் கடிதத்தை எனக்குக் காட்டவில்லை.ஆயினும், உன் மறுமொழிக் கடிதத்தை எனக்குக் காட்டுவது உறுதி. ஆகவே, அம் மறுமொழிக் கடிதத்தின் முன்மாதிரிப் படிவமொன்றை உனக்கு அனுப்பியிருக்கிறேன். நீ இன்னும் கடிதம் எழுதுவதில் தேர்ந்து பெண்டிருக்குக் கடிதம் எழுதும் அளவு பயிற்சி பெற்றுவிடவில்லை யாதலால் இங்ஙனம் நான் உனக்கு உதவ முன்வருவதை நீ பொறுத்துக்கொள்ள வேண்டும் இதில் தொடக்கக்கால உதவியின்றி நீ தேர்ச்சி பெற முடியாது.
கடிதம் எழுதுவது ஓர் அருங்கலை - கடிதங்களும் பலவகைப் பட்டவை. இலத்தீன் எழுத்தாளரும் பெருஞ்சொற் பெருக் காளருமான ஸிஸரோ தம் நண்பர் அட்டிகஸுக்கு எழுதிய கடிதங்கள் எளிய, அன்பு கனிந்த நடை உடையவை. ஆயினும், அவை நல்ல இலக்கியமும் ஆகும். வேறு சில வகைக் கடிதங்கள் தொழில் பற்றியவை. தொழிற் கடிதங்கள் எவ்வாறு எழுத வேண்டும் என்பதைத் தனிப் பாடப் பயிற்சி செய்துதான் நீ அறியுமுடியும். இதில், இலக்கிய நடை, அன்புக் கனிவு, நகைச்சுவை ஆகியவை விலக்கப்பட வேண்டும். உணர்ச்சியை அடக்கிய - நய நாகரிகம் மிக்க, தெளிந்த நடையும், தொழில்மரபு வழக்கு மாறாத சொற்படிவங்களும் இதில் இன்றியமையாதவை. இன்னும் சில கடிதங்கள் இன்பப் பொழுது போக்கானவை. இவற்றையும் சிலர்