செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்
141
நட்பு என்ற பெயருடன் இளைஞர்களிடையே ஒருவகை உறவு ஏற்படுவதுண்டு. அது உண்மையில் நட்பன்று தெய்வச் சயலாக, நட்பைப் போல் அது நீண்டநாள் நிலைபெறுவதும் இல்லை. ஆனால், அது நிலவும் காலத்தில் இனிமையுடைய தாகவே காணப்படும். ஒரு முறை ஒருவரை ஒருவர் கண்ணுற்ற தனால் அது தோற்றிவிடும். குடி, கீழான வாழ்க்கை ஆகிய பொதுப் பழக்கங்களில் ஈடுபடுவதனால் அது விரைந்து வளரும் இது நல்ல நட்பேயன்றோ! இதனை நட்பு என்பது ஒரு இடக்கரடக்கலேயன்றி வேறன்று. உண்மையில் அது நல்வாழ்வுக்கும் ஒழுக்கத்துக்கும் எதிரான ஒரு கூட்டுச் சதியே. குற்ற வழக்குமன்றத் தலைவர்கள் இதனைச் சட்டப்படி குற்றமாக்கித் தண்டனை செய்தால் எவ்வளவோ நன்றாயிருக்கும்! இந் நண்பர்கள்' ஒருவருக்கொருவர் பணங் கொடுத்து உதவுவர். தங்கள் பாதுகாப்புப் போர்களிலும் தாக்குதல் போர்களிலும் ஒருவருக்கொருவர் உதவுவதாகக் கூட்டொப்பந்தம் செய்து கொள்வர். ஆனால், இத்தனை ஒற்றுமையையும் சட்டென ஒரு சிறு நிகழ்ச்சி வந்து தடந் தெரியாமல் நிறுத்திவிடும். அதன்பின் அவர்கள் புதுக் கூட்டுறவு நாடிப் பழங் கூட்டுறவை மறப்பர். அதுமட்டுமோ? ஒருவரை மற்றவர் காட்டிக் கொடுக்கவோ, அவர்கள் முன்னாளில் நம்பகமாகக் கூறிய மறை செய்திகளை வெட்ட வெளிச்சமாக எடுத்துரைத்து அவமதித்து நகையாடவோ தயங்க மாட்டார்கள்.
தோழமைக்கும் நட்புக்கும் நீ வேற்றுமை அறிதல் வேண்டும். மனதுக்கியைந்த மிகச் சிறந்த தோழன்கூட அடிக்கடி மிகத் தகாத, மிகவும் இடர்தரும் நண்பனாய்விடக்கூடும்.
பிறர் உன்னைப்பற்றிக் கொள்ளும் கருத்துப் பெரும்பாலும் உன் நண்பரைப்பற்றி அவர்கள் அறிந்த கருத்தாகவே இருக்கும். இது அவ்வளவு தவறானதுமன்று. “ஒருவன் யார்யாருடன் கூடி வாழ்கிறான் என்று சொல்லு, நான் அவன் எத்தகையவன் என்று சொல்லி விடுவேன்." என்று ஸ்பானியப் பழமொழி உண்டு. ஒரு மூடனையோ போக்கிலியையோ நண்பனாகக் கொண்ட ஒருவன் பல செய்திகளில் மறைந்தொழுகும் இயல்புடையவனாகவே இருப்பான் என்று மக்கள் எண்ணுவது இயல்புதானே!
தீயவர்கள், அறிவிலிகள் ஆகியவருடன் நட்பாடவேண்டாம் என்று நான் கூறுவதிலிருந்து, அவர்களைப் பகைத்துக்கொள்ள