142
அப்பாத்துரையம் - 27
வேண்டுமென்று கூறுவதாக நீ எண்ணிக்கொள்ளக் கூடாது. அவர்கள் பெரும்பாலும் தீமையில் முனைந்தவர்களாகவும் பலவகைக் கூட்டுறவு உடையவர்களாகவும் இருத்தல் கூடும். ஆகவே, அவர்கள் நட்பும் பகைமையும் எதுவும் தீமை தருவதே. அவர்களிடம் நட்புமின்றிப் பகைமையுமின்றிப் பொது முறையில் விலகியிருந்து கொள்வதே சாலச் சிறப்புடையது. ஆயினும், அவர்கள் பகைமையினும் நட்பு மிகவும் தீமை தருவது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
அவர்கள் நட்பையும் பகைமையையும் விலக்கி அவர்களை நொதுமலராகக்கொள்ள நல்லவழி ஆவது அவர்களையும் மற்ற அயலார்களையும் மேற்போக்காக நண்பர்களைப்போல் நயநா கரிகத்துடன் நடத்துவதேயாகும். அவர்களை விலக்குவதற்காகக் கூட ஒதுங்கி நடந்தால் அவர்கள் வெறுப்பும் பொறாமையும் கொள்வர். அவர்களை அறியாத பிறர் நீ அன்பற்றவன் என்று கொண்டுவிடவும் கூடும்.
நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அடுத்தபடியான சிறப்புடையது நல்ல தோழர்களைத் தேர்ந்தெடுப்பதாகும். கூடிய மட்டும் உன்னிலும் உயர்ந்தவர்கள் கூட்டுறவையே நீ நாடல் நல்லது. கீழானவர்களுடன் கூடுவதினால் நீ கீழ்மை அடைவது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு மேலானவர் உறவால் நீ மேன்மை உறுவதும் உறுதி. உன்னிலும் மேலானவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது பிறப்பில் மேலானவர்களையன்று. உண்மையில் மேன்மைகள் எனப்படும் பலவற்றுள்ளும் மிகக் குறைந்த மேன்மை இதுவே. நான் பாராட்டும் மேன்மை குணச்சிறப்பையும் உலகில் மக்கள் மதிக்கும் மதிப்பின் சிறப்பையுமேயாகும்.
நன்மைதரும் கூட்டுறவு வாழ்க்கை இருவகைப்படும். ஒன்று உலகியல் வாழ்வில் உயர்ந்தோர் கூட்டம் அவர்களே அரசவை களிலும் நல்லின்ப வாழ்வுக் குழாங்களிலும் சிறப்பெய்தி யுள்ளார்கள் மற்றொன்று புலனெறி வாழ்க்கைப் பொலிவுடையார் கூட்டுறவு. இத்தகையோர் யாதானுமொரு கலை, அல்லது அறிவியல் துறையிலோ, அல்லது வேறுவகைச் சிறப்பிலோ மேம்பாடுடையவர்கள். இவ்விரு வகையினருள் எவர் சிறந்தவர்? என்னைப் பொருத்தவரையில் ஐரோப்பாக் கண்டத்தின்