பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்

145

கடிதம் 19

பிறர்க்கு இனியனாதல் எவ்வாறு?

லண்டன், அக்டோபர் 16, 1747,

அன்பார்ந்த சிறுவனே,

பிறர்க்கினியனாய் வாழ்வது ஒருவனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் பண்புகளுள் ஒன்று. ஆயினும், அது பெறுவதற் கரியது. அதற்கான ஒழுங்கு முறைகள் எதனையும் வகுத்துக் கூறவும் முடியாது. உன் அனுபவத்திலிருந்தே அவற்றை நீ அறியவேண்டும். ஆயினும், பிறருக்கு இனியனாயிருப்பதில் வெற்றியடைவதற்கான அடிப்படை ஒழுங்கு ஒன்றை நான் கூறக்கூடும். அது, 'பிறர் உன்னிடம் எவ்வகையில் நடக்கவேண்டும் என்று நீ விரும்புவாயோ, அவ்வாறே அவர்களிடம் நட' என்பதே. உன் பண்புத் திறங்கள், சுவைத் திறங்கள் ஆகியவற்றுக்குப் பிறர் சலுகை காட்டினால் உனக்கு இன்பம் ஏற்படும் என்பதை நீ காணலாம். ஆகவே பிறர் பண்புத் திறங்களுக்கும் சுவைத் திறங்களுக்கும் நீ சலுகை காட்டி நடத்தல் நலம்.

நீ சாரும் குழுவின் இயல்பையும் குறிப்பையும் ஏற்று நட; உன் இயல்பையும் குறிப்பையும் அக்குழு மீது சார்த்தவோ சார்த்துவதாகக் காட்டிக்கொள்ளவோ கூடாது. பிறர் அமைதியுடனிருக்கும் நேரம் நீயும் அமைதியுடன் நட; பிறர் பொழுதுபோக்கும் நேரம் நீயும் பொழுது போக்கை மேற்கொள், ஒவ்வொரு தனி மனிதனும் குழுவின் உறுப்பினன் என்ற முறையில் குழுவுக்கும் குழுவில் பெரும்பாலாருக்கும் செய்ய வேண்டும் இன்றியமையாக் கடப்பாடு இது.

நீண்ட கதை அல்லது நிகழ்ச்சியை விரித்துரைத்தல் முற்றிலும் விலக்கத்தக்கது. சமய வாய்ப்பறிந்து குறிப்பாகக் கூறினாலும், கூடியமட்டும் சுருங்கக் கூறு. பிறர் வேண்டினாலன்றி