(146) ||
அப்பாத்துரையம் - 27
அவர்கள் நேரத்தை நீ வீணாக்க முயலவில்லை என்பதை உன் சொல்லிலும் நடையிலும் விளக்கிக்காட்டு.
உன் உரையாடலில் தன் முனைப்புக்கு இடம் இருத்தல் தகாது. உன் எண்ணம், உன் விருப்பம், உன் வாழ்க்கை நிகழ்ச்சிகள், உன் கோட்பாடு ஆகியவற்றை அடிக்கடி கூறாதே. அவைகள் உனக்கு விருப்பமானவையா யிருக்கலாம். பிறருக்கு அப்படியிருக்க வேண்டுமென்பதில்லை. உன் திறம் தெரியவரும்படி உனக்குகந்த பொருள்கள்மீது பிறர் உரையாடலைத் திருப்ப நீயாக முயற்சி செய்யக் கூடாது. உன் கருத்துக்களைத் குறிக்கும் போது ஒரு தனிமனிதன் கருத்து என்ற அளவில் அடக்கத்துடனும் நயத்துடனும் கூறு. உணர்ச்சியின் வேகமோ வெம்மையோ தோன்ற உரையாடாதே. அடிப்படை வேறுபாட்டால் உரையாடலில் சிக்கல் வருமானால், அப்போது அதனை வாதாடி முடிக்க முயலலாகாது; வேறு பொருள்பற்றிப் பேசுவோம் என்று உரையாடலை மாற்றல் வேண்டும்.
ஒரு குழுவில் நன்மையானதா யிருக்கக்கூடும் சொல் அல்லது பொருள், வேறொரு குழுவுக்குப் பொருந்தாது. அதுவே மாறானதா யிருக்கலாம். ஆகவே, அவ்வக்குழுவின் குறிப்பறிந்து ஒழுகு.
தனி மனிதர் எவரிடமேனும் நீ செல்வாக்குப் பெற விரும்பினால் அவர்கள் சிறப்புத்திறம் எது, அவர்கள் பெருங் குறைபாடு எது என்பதை நீ அறிதல் வேண்டும். சிறப்புக்களின் தகுதி முழுமையையும் பாராட்டு. குறைபாடுகள் வகையில் அவற்றின் தகுதிக்கு மேம்படச் சலுகை காட்டுதல் வேண்டும். இதனால் அவர்கள் குற்றங்களையும் குணங்களாகக் கூற வேண்டும் என்பதில்லை. குற்றங்களைக் குற்றமாகக் கூறுவதே நலம். ஆனால், பெருங்குற்றமல்லாத, பிறருக்குத் தீங்கில்லாச் சிறு குறைபாடுகள் எல்லாரிடமும் உண்டு. அவற்றுக்குச் சலுகை காட்டுவதால் யாருக்கும் கடுதல் ல்லை. அதனை உடையவர்க்கு அச்சலுகை மகிழ்ச்சியை உண்டு பண்ணு வதுடன், உனக்கு அவர்கள் மாறா நட்பையும் தரும்.
சில பெரியார்கள் தம் தனிச் சிறப்புக்களை அறிந்தும் வேறு சிறப்புக்களை உள்ளூர அவாவுவர். அவர்கள் தனிச்சிறப்புக்கள் யாவரும் அறிந்தவையாயிருந்தால் அதனைப் பரப்புதல்