பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

அப்பாத்துரையம் - 27

செலவிடுவதுண்டு. அதனால் இளமையின் முழுப்பயனை அவர்கள் எய்துவர்.

வாழ்க்கை நிகழ்ச்சிகளிடையே இடைவேளைகளில் கூடச் சிறு சிறு அளவில் வாசித்துணர இலக்கியம், கவிதை ஆகியவை பெரிதும் ஏற்புடையவை. அறிவியல் நூல்களும், கவிதைகளில் சிலவும் ஆழ்ந்து தொடர்ச்சியாய்ப் பயிலத் தக்கவை. ஆனால், பெரும்பாலான இலக்கியங்கள் அங்கு மிங்குமாக ஒரு தடவை படிப்பதனாலேயே பயன்தரத்தக்கவை. இ டைவேளைகளில் அவற்றை மிகுதியான அளவில் பயில்பவன் வாழ்க்கையின் பரந்த அனுபவங்களை யாவரினும் மிகுதியாக அறிய வகை தேடியவன் ஆவான்.

உன் இளமைக்காலம் பற்றியவரையில் உன்னுடன் நான் ஒரு பேரம் செய்துகொள்ள விரும்புகிறேன். உன் பதினெட்டாம் வயது முடிவு வரை நீ எப்பாடுபட்டாவது என் விருப்பப்படிநடந்து எனக்கு மனநிறைவு உண்டுபண்ண முயற்சியெடுத்துக்கொள். அதன்பின் உன் வாழ்க்கை முழுமையிலும் நீ விரும்பிய யாவும் நான் செய்ய உறுதி கூறுகிறேன். உன் இரண்டு மூன்று ஆண்டுகளின் சுதந்திரத்தைக் கொடுத்து அதன் பின்வரும் பல ஆண்டுகளுக் குரிய உன் சுதந்திரத்தைப் பெறுவது உனக்கு ஆதாயம் அல்லவா?

உன் மேம்பாட்டை விரும்பும் உன் தந்தை,