பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்

155

நான் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் ஓய்வு பெற்றுக் கொள்வேன் என்பது உறுதி. ஆனால், அரசியற் பணியிலீடுபடுவதற்கு நீ இன்னும் மிகுதியான தகுதிகள் பெறவேண்டும்.

அரசியற் பணியில் புகழ்பெற விரும்புபவன் பல நாடுகளின் அரசியலமைப்பையும் வகையையும் தேர்ந்தறிதல் வேண்டும். பேரரசுகளின் தோற்ற வளர்ச்சி ஒடுக்கங்கள், அவற்றிற்கான காரண காரியத் தொடர்புகள் முதலியவைகளை ஐயந்திரிபற உணர்தல்; ஒவ்வொரு நாட்டின் வலிவு மெலிவுகள், அதன் செல்வ வளங்கள், வாணிக விவரங்கள் ஆகியவற்றை அறிதல்; இன்னும் பல நாட்டு மொழிகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நுனித்துணர்தல் ஆகிய யாவும் அரசியற்பணி ஏணியின் படிகள் ஆகும்.

இவையன்றி கோப தாப உணர்ச்சிகளை அடக்குதல்; விருப்பு வெறுப்புக்களைச் சொல்லிலும் தோற்றத்திலும் வெளிப்படா தடக்குதல்; பொருளற்ற சிற்றுரைகளில் ஈடுபட்டுச் சிறுநடை பயின்றும் தன்மதிப்புக் கெடாதிருத்தல்; ஆள் தரமறிந்து நடத்துதல்; மறுக்க வேண்டியதை வினயமாக மறுத்தல்! வேண்டிய இடத்தில் கவர்ச்சிகரமாகப் பேசிக் காரியமுடித்தல்; கொடுப்பதை நயமாகக் கொடுத்து நயமொழி பகர்ந்து அதன் மதிப்பை இரட்டித்தல்! பொய்யுரை கூறாமலே வேண்டா உண்மையை அடக்கும் திறன்; பிறர் தோற்றத்தி லிருந்தும் நடையிலிருந்தும் அவர்கள் குணம், எண்ணங்கள் ஆகியவற்றை உய்த்துணரும் ஆற்றலுடையவனாயிருத்தல்; கபடமற்ற தோற்றத்துடன் கருத்துக்களை; அடக்கி வைத்தல் ஆகிய எண்ணற்ற சிறுதிறங்கள் அரசியல் வல்லுநன் வெற்றி வாழ்வுக்கு இன்றியமையாதவை.

மூன்று அஞ்சல் முறைகள் இன்றுதான் ஒன்றாக வரவிருப் பதால் உன் கடிதங்களுள் எதுவும் இன்னும் என் கைக்கு வரவில்லை. உன் வெற்றிகளை எதிர்பார்த்து நலமடைய அவாவும்.

உன் தந்தை,