158
அப்பாத்துரையம் - 27
இயற்கையும் செயற்கையும்
கடிதம் - 24
லண்டன், ஏப்ரல் 1, 1748.
அன்புமிக்க மைந்த,
மூன்று அஞ்சல் முறைகளாக உன்னிடமிருந்தோ திரு. ஹார்ட்டிட மிருந்தோ யாதொரு கடிதமும் வரவில்லை. பெரும் பாலும் லீப்ஸிக்குக்கும் இவ்விடத்துக்குமிடையே ஏதேனும் விபத்து நேர்ந்திருக்கக்கூடும் என்பதே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இவ்வளவு தொலைவான இடங்களிடையே யுள்ள அஞ்சல் போக்குவரத்துக்களில் அங்ஙனம் நேரிடுவது இயல்பே. இத்தகைய சமயங்களில் கடித வகையில் நான் கொண்டுள்ள ஒரு கோட்பாடு எனக்கு மிகுதியும் ஆறுதலாக உதவுகிறது. நன்மை இயல்பென்றும் தீமை தற்செயலாக நிகழ்வதென்றும் நான் எண்ணுவதனால், கடித மூலம் ஏதேனும் இடையூறு நேர்ந்ததெனக் கேட்டாலன்றி நீ நலமா யிருப்பதாகவே எண்ணிக்கொள்கிறேன். ஆகவே, எவ்வகைக் கடிதமுமில்லாத வேளைகளில் தீமை எதுவும் கிடையாது என்று எண்ணிக் கொள்வேன்.
உடல் நலத்தைப்பற்றி குறிப்பிட்டதை ஒட்டி அதுவகையில் உனக்குச் சில சொல்ல விழைகின்றேன். மட்டான வாழ்வு, மட்டான இன்ப நுகர்வே உடல் நலங் காக்கச் சிறந்த வழி. ஏனெனில், இயற்கையின் அமைதி உடல்நலமே யன்றி நோயன்று. நாமாக வலிந்து பெறுவது நோயே யன்றி உடல்நல மன்று. வந்த நோய் குணமடைவதுகூட இயற்கையினாலேயேயன்றிச் செயற்கையாலன்று. மருத்துவன் செயற்கையாகத் தரும் மருந்துகளால்தான் நோய் குணப்படுகின்றது என்று பொதுவாக மக்கள் எண்ணுகின்றனர். இது ஆய்ந்த உண்மையன்று; ஏனெனில், மருத்துவன் செய்வதெல்லாம் செயற்கையால்