செஸ்டர் ஃபீல்டின் கடிதங்கள்
161
மன்னர் திருமுன்
கடிதம் - 25
60600TL6OT, CLO 27, 1748.
உனது 16ஆம் தேதி கடிதம் கிடைத்தது. ஸர் சார்ல்ஸ் வில்லியம்ஸ் உனக்குப் பலவகைகளில் துணைதந்தாதரித்தது பற்றி நீ அதில் குறிப்பிட்டிருந்ததனால், உன் சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறேன். ஒரு மன்னர் அவையில் நீ முதன் முதலாக அடைந்துள்ள உன் அனுபவம் உனக்குப் பெருமையளிப்பதேயாகும். உனக்குத் தரப்பட்ட இச் சிறப்பு மரியாதையை நீயும் மரியாதையுடன் நன்கு வரவேற்றிருப்பாய் என்று நம்புகிறேன். தாழ்ந்த கூட்டுறவும் குறைவான கல்வி கேள்விப் பயிற்சியும் உடையவர்கள் இப்பெருமையை எப்படி ஏற்பதென்று தெரியாமல் குழப்பமடைந்திருப்பர். மன்னரிடம் நேருக்கு நேர் பேச வாய்ப்பு வந்தபோது அதற்கேற்றபடி தகுதி பெறாமல் நாக்குக் குழறி நாண மடைந்து குழம்பியிருப்பர். ஆனால், பண்பாடுடையவர் ஒரு போலந்துப் பிரஜையிடம் எவ்வளவு சாதாரணமாகப் பழகுவாரோ அதே அளவில் சாதாரணமாகப் போலந்து மன்னரிடமும் பழகுவார். இங்கிலாந்தின் உயர்தரப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் பயிற்சிகள் அனைத்தும் முற்றுப் பெற்ற பின்னும்கூட எத்தனையோ இளைஞர்கள் மன்னர் முன்னிலையில் போனவுடன் கால்மீது நிற்கிறோமா, தலைமீது நிற்கிறோமா என்றறியாது திண்டாடியுள்ளனர். சிலர் நிலத்தையே பார்த்துக் கொண்டும், சிலர் கைகால் பறக்கப் படபடத்துத் தொப்பியைக் கீழே போட்டும், மைப்புட்டிகளை உடைத்தும் நகைக்காளாகி யுள்ளனர். நீ பண்பாடுடையவர் போலவே மன்னருக்கு, மன்னர் என்ற முறையில் மதிப்பும் தந்து, மனிதன் என்ற முறையில் மனிதருடன் மனிதராக அளவளாவியது கேட்டு மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டேன்.
ா