பக்கம்:அப்பாத்துரையம் 27.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

அப்பாத்துரையம் - 27

முன்னேற்றத்தைத் தடுக்கும் இருவகைக் கேடுகள்

கடிதம் - 27

லண்டன், ஜூலை 26, 1748.

அருமந்த சிறுவ,

உள்ள நிலைகளில் ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு நிலைகள் உண்டு - ஆனால், வளர்ச்சிக்குக் கேடு செய்வதில் இரண்டும் ஒருவகைதான். ஒன்று புற்றை மலையென மலைக்கும் மிடிமை. மற்றொன்று மலையைப் புற்றென நினைக்கும் அவல உணர்ச்சி நிறைந்த மடமை. இவ்விருவகை நச்சு மன நிலைகளும் உன்னிடம் இல்லை. அவை பற்றாது விழிப்பாயிருத்தல் வேண்டும்.

மிடிமையுள்ளங்கொண்ட சோம்பேறி எப்பொருள்

களையும் ஆழ்ந்து நோக்கமாட்டான். ஒரு செயலின் முதல் தடையே அவனுக்கு இறுதித் தடையாய் விடும். கால்தடுக்கி விழச்செய்யும் கல்லுக்கும், தடுத்து நிறுத்தி விடும் வானளாவிய மலைக்கும் அவனளவில் வேற்றுமையில்லை. சிறிது தடங்கலும் தொந்தரவும் இல்லாமல் பெரும்பாலும் எதையும் அறிய முடியாதாதலால் அவன் பொதுப்படையிலும் பொதுப்படை யான தாழ்ந்தபடிப் பொது அறிவளவிலேயே நின்றுவிடுவான். ஒரு சிறு தொந்தரவைப் பெரிதாயெண்ணி அறிவுப் பேரொளியை முற்றிலும் அவன் இழந்து விடுகிறான். அவன் எப்பொருளையும் எளிது என்றோ, கடிது என்றோ, மிகக் கடிது என்றோ அரிது என்றோ கூறான்; முடியும் முடியாது என்ற இரு வகையில் எவற்றையும் அடக்கிவிடுவான். தான் முயன்று செய்யத் தயங்குபவற்றை யெல்லாம் 'முடியாதவை' என்று கூறித் தன் முயற்சியின்மையை மறைக்கப் பார்ப்பான். பிறரிடம் அவன் பேசும்போது எவரும் அவனிடம் புதுமை, ஆழ்ந்த கருத்து